இன்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அரோரா, தேர்தல் தேதியை அறிவித்தார். 17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகத்தில் ஏப் 18 அன்று வாக்குப் பதிவு நாள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, தமிழ்நாட்டில் ஏப்.18ம் தேதி வாக்குப்பதிவின் போது 5 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவதாக, இப்போதே கணக்குப் போட்டு குதூகலம் அடைந்து வருகின்றனர் பலரும்.

ஒரு நாள், ரெண்டு நாள் லீவு வுட்டாலே ஊரச் சுத்திப் பாக்கப் போயிடுவாங்க… இதுல 5 நாளு தொடர்ச்சியா லீவு வுட்டா… ஒரு பய ஓட்டுப் போட இருக்க மாட்டானே! அதுவும் தேர்வுகள்லாம் முடிந்து பல பள்ளிக்கூடங்கள்ல லீவு வுடுற நேரம் வேற… எல்லாப் பயலுவளும் ஊரப் பாத்துப் போயிடுவானுங்களே..! என்று இப்போதே புலம்பத் தொடங்கியுள்ளன அரசியல் கட்சிகள்!

5 நாள் தொடர் விடுமுறையால், எந்தக் கட்சிக்கு லாபம், எந்தக் கட்சிக்கு விழும் ஓட்டு கூட விழாமல் போகும் என்றெல்லாம் இன்றே ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

ஏப்.17-மகாவீரர் ஜெயந்தி
ஏப்.18- நாடாளுமன்ற தேர்தல்
ஏப்.19-புனிதவெள்ளி
ஏப்.20- சனி
ஏப்.21- ஞாயிறு விடுமுறை  – அவ்வளவுதான் சொல்லிப்புட்டோம்..~!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...