spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?சுட்டெரிக்கிற வெய்யிலுல... சுட்டுத் தள்ளுறோம் பாருங்க...!

சுட்டெரிக்கிற வெய்யிலுல… சுட்டுத் தள்ளுறோம் பாருங்க…!

- Advertisement -

வட மாநிலங்களில் வெய்யில் சுட்டெரிக்கிறது. சுட்டெரிக்கும் சூரியன் கதிர்களைத் தாங்கிக் கொண்டு தேர்தல் பிரசாரமும் களை கட்டுகிறது.

அனல் காற்றின் கடுமையில் வருந்தோறும் பலர் உயிரிழப்பது வாடிக்கை ஆகிவிட்டது. இந்த வருடம் மாறாக மின்னல் வெட்டால் உயிரிழந்திருக்கின்றனர் பலர். இத்தகைய சூழலிலும், தங்கள் வாழ்க்கை முறையை நகைச்சுவையாக வெளிப்படுத்தி வருகின்றனர் சமூக வலைத்தளங்களில்.

அடிக்கிற வெய்யிலுல எல்லாம் காஞ்சி கருவாடா போயிடிச்சி… என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அந்த வெயில்லையும் நாங்க உபயோகமா பயன்படுத்திக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, தமிழக கிராமங்களில் மட்டுமல்ல சென்னை போன்ற நகரங்களிலும் கூட வீட்டின் மொட்டை மாடியில் ஒரு வருடத்துக்குத் தேவையான வத்தல், வடகம் எல்லாம் போட்டு வெயிலில் காயவைத்து எடுப்பது வழக்கமான ஒன்றுதான்.

இதற்கு ஒரு படி மேலே போய், நாங்க இந்த வெயில்ல எவ்ளோ உபயோகமா பயன்படுத்திக்கிறோம் பாருங்க.. என்று சுட்டெரிக்கும் வெயிலில் சூடான இருசக்கர வாகனத்தின் சீட்டில் தோசை மாவை ஊத்தி, அதில் எண்ணெய் விட்டு, சுளுவாக சுட்டு எடுக்கிறார் ஒருவர்.

இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் இதுதான் எங்க ஊரு நிலைமை என்கிறார். சென்னையைச் சேர்ந்தவர் இதான் நம்ம ஊரு நெலம என்கிறார்.

[videopress TDIt4dKw]

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe