நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2019 இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின

ஐபிஎல் போட்டிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு எழுதிக் கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட் அடிப்படையிலேயே இயங்குகின்றன என்று பல ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதங்கங்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர்

இந்நிலையில் பலரும் எதிர்பார்த்தது போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரே ஒரு ரன்னில் தோல்வியை தழுவியது. இது ஒரு நாடகம், எழுதிக் கொடுக்கப் பட்ட ஸ்க்ரிப்ட் அடிப்படையிலேயே ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன என்று பலரும் சொல்லித்தான் வருகிறார்கள்.

கோப்பையை கோட்டை விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரைவிட சென்னை அணிக்காக கோஷமிட்டு கொண்டு கிரிக்கெட் பார்த்து வந்த சிறுவர்களும் இளைஞர்களும் அழுது தீர்த்தனர்

இப்படித்தான் ஒரு சிறுவன் கண்ணீர் பொங்க இரவு முழுக்க மேட்ச் பார்த்துவிட்டு தோல்வியை தாளாமல் தேம்பித் தேம்பி அழுகிறான்.  அந்த சிறுவனை அவனது தாயார் சமாதானப்படுத்துகிறார்.

அப்போது “அவனுங்க தோற்றதற்காக நீ ஏண்டா அழுவுற?” என்று அவனது தாயார் சமாதானப்படுத்த, அந்தச் சிறுவனோ போர்வையைத் தூக்கி தன் முகத்தில் போர்த்திக் கொண்டு கண்களைக் கசக்கி “தோனி அவுட்டே இல்ல சும்மாதான் அவுட் கொடுக்குறாங்க” என்று  கூறுகிறான்

அவனது தாயார் அதற்கு, “அதுதான் மேட்ச் பிக்ஸிங்” என்கிறார். அதற்கு அந்த சிறுவன் “மூன்றாவது அம்பயர் தூக்குப்போட்டு செத்துவிடுவார்” என்று அழுதுகொண்டே கூறுகிறான். இந்த வீடியோ இப்பொழுது இணையதளங்களில் வைரலாகி வருகிறது!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...