நீட் தேர்வால் டாக்டராகும் நம்பிக்கை பெற்ற சலூன் கடைக்காரரின் மகன்!

#துளசிநாதன் நீட் தேர்வில் வெற்றிபெற்ற சண்முகம் என்ற  ஏழை சலூன் கடைக்காரரின் மகன்.  

#துளசிநாதன் நீட் தேர்வில் வெற்றிபெற்ற சண்முகம் என்ற  ஏழை சலூன் கடைக்காரரின் மகன்.

திருச்சி மாவட்டம் காவேரி கரை ஓரத்தில் சிறுகமணி என்கின்ற ஒரு கிராமம். இந்த கிராமத்தில் திரு சண்முகம் மகேஸ்வரி தம்பதியரின் மகன் துளசி நாதன்.  ஜனனி என்கின்ற தங்கை ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். சண்முகம் ஒரு முடிதிருத்தும் தொழிலாளி.

சிறிய அளவில் சலூன் கடை நடத்தி வருகிறார். தினசரி 500 லிருந்து 600 வரை வருமானம் இருக்கும். வீட்டில் சண்முகத்தின் அம்மா அப்பா பெரியவர்கள் இருக்கிறார்கள். மாணவன் துளசி நாதன் திருச்சியில் உள்ள ஜெயேந்திரா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்தார்.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் 399 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இந்த செய்தி அறிந்து அந்த மாணவனை வாழ்த்துவதற்காக அவர்களின் இல்லத்திற்கு சென்றிருந்தேன். அப்பொழுது அவர்கள் சொல்லிய செய்தி என்னை நெகிழ்ச்சியடைய செய்தது.

சாதாரண குடும்பம் ஏழையான எங்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது கனவிலும் எட்டாத ஒரு கனியாகவே இருந்தது . ஆனால்  நீட் தேர்வு வந்ததனால்  அந்தத் தேர்வில் நன்கு படித்து  வெற்றி பெற்று எந்தவிதமான பண பின்புலம் இல்லாத என்னைப் போன்றவர்களும் மருத்துவத்துறையில் படிக்க முடியும் என்கின்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களையும் மாண்புமிகு தமிழக முதல்வரையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

மேலும் என்னைப் போன்ற ஏழை மாணவ மாணவியர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று அவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்க பெற்றால் பேருதவியாக இருக்கும் என்றார். மேலும் என்னைப்போன்ற மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு தேவையானகல்வி கட்டணத்தை கட்ட இயலாத நிலையில்

அரசாங்கம் உதவினால் நீட் தேர்வில் மாணவர்கள் வெற்றி என்பது இன்னும் அதிகமாக தமிழகத்தில் வரும் என்றார். இதுகுறித்து மாண்புமிகு பாரதப் பிரதமர்,
மாண்புமிகு தமிழக முதல்வர்  மாண்புமிகு கல்வி அமைச்சர் மாண்புமிகு மருத்துவ அமைச்சர் ஆகியோர் ஒரு செயல் திட்டத்தை வகுத்து மாணவர்களுக்கு உதவிட
இந்து தமிழர் கட்சியின் சார்பில் கோரிக்கை முன்வைக்கிறோம்.

நீட் தேர்வில் வெற்றி பெற்றமைக்கு தாங்கள் பாரதப் பிரதமருக்கும் , மாண்புமிகு முதல்வருக்கும் நன்றி  தெரிவிக்க விரும்புகிறார்கள். இதற்கு நேரம் ஒதுக்கி தந்து உதவிடுமாறு வேண்டுகோள் முன்வைக்கிறோம்.

இவருடைய கல்விக்கான கட்டணம் செலுத்த உதவ விரும்பினால் பேருதவியாக இருக்கும். சமுதாயத்தில் நல்ல விஷயங்களை பாராட்டக்கூடிய, வாழ்த்த கூடிய நேர்மறையான சிந்தனைகளை  நாம் உருவாக்கிட வேண்டும். மருத்துவக் கல்லூரியில்
சேர்ந்து படித்து மக்களுக்கு  தொண்டு செய்திட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

– இராம. இரவிக்குமார் (நிறுவன தலைவர், இந்து தமிழர் கட்சி)

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...