- Advertisement -
கருவூர் தொழில்பேட்டை பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று நடைபெற்றது!
கருவூர் தொழில்பேட்டை அறச்சாலை பத்ரகாளியம்மன் ஆலய 28 – ஆம் ஆண்டு விழாவும், மழை வேண்டி கூட்டு வழிபாடும்’ அம்மன் திருவீதி உலாவும் இன்று காலை நடைபெற்றது.
அறச்சாலை நிறுவனர் காளிமுத்து ஐயா தலைமையில் கெளரவ தலைவர் மேலை -பழநியப்பன், க.ப.பாலசுப்பிரமணியன் லயன் கார்த்திகேயன் முன்னிலையில் அபிஷேகம் சிறப்பு ஹோமம் நடைபெற்று மழை வேண்டி கூட்டு வழிபாடு ஜெகன்னாத ஓதுவார் பாடல் இசைக்க நடை பெற்றது கோபால் தர்மன் சண்முகம் மருதை கணேஷ் அபிராமி ருத்ரா உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து அறச்சாலை பத்ர காளியம்மன் புறப்பாடும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆநிலை பாலமுருகன் சிறப்பாக செய்திருந்தார்.
- Advertisement -