என்னது… ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகளா? சமூக வலைதளங்களில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் படம் இந்தச் செய்தியுடன் அதிகமாக வைரலானது!

அந்தப் படத்தில் ஒரு பெண்மணி மிகப் பெரிதாக வீங்கிய வயிற்றுடன் இருப்பது போல் காட்டப்பட்டு, இந்தப் பெண் 17 குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற தகவலை கூறி ஒரு பேஸ்புக் தொடர்பையும் கொடுத்திருந்தார்கள்!

இது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது! மேலும் பெரும்பாலான மக்கள் இந்த படங்களை பகிர்ந்தனர்.

ஆனால் இந்தப் படம் ஒரு கேலியும் கிண்டலும் செய்யக்கூடிய கற்பனைச் செய்திகள் கொண்ட இணையதளத்தில் வெளியான ஒரு ரிப்போர்ட்! இது கதை இடைப்பட்ட செய்தியாக உலகச் செய்தி ரிப்போர்ட் என்ற அடிப்படையில் வெளியாகியுள்ளது!

ரிச்சர்ட் கேமரின்டா என்பவர் மே மாதம் 30 ஆம் தேதி தனது முகநூலில் இந்த படத்தை பகிர்ந்திருந்தார். இது 33 ஆயிரம் பேருக்கும் மேலாக ஷேர் செய்யப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துகள்.  மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பங்கள். இப்படி பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது இந்தச் செய்தி, இவரது பேஸ்புக் பக்கத்தில்!

ஆனால், இது குறித்த செய்தியை வெளியிட்ட  இணையதளம் கதைகள் மற்றும் கற்பனைகளை அதிகம் வெளியிடக்கூடிய இணையதளம் என்பதை அதுவே கூறிக் கொண்டிருக்கிறது! ஆனால் இந்தச் செய்தியைப் பகிர்ந்த பெரும்பாலான மக்கள் அதை உண்மையான செய்தியாகவே நம்பிக் கொண்டு எந்தவித அறிமுகமும் செய்யாமல் தாங்களாகவே பகிர்ந்தார்கள்

அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த கர்ப்பிணிப் பெண்ணின் புகைப்படம் போட்டோஷாப் முறையில் மாறுதல் செய்யப்பட்டிருந்தது! அதேபோல் 17 குழந்தைகள் பிறந்ததாக கூறப்பட்ட படமும் பழைய ஒரு புகைப்படம் தான்! இந்த புகைப்படங்களுடன் காணப்படும் நபர் ராபர்ட் விட்டார் என்ற அமெரிக்காவின் (gynecologist) மகளிர் நோய் மருத்துவ நிபுணர்!

இந்தச் செய்தியும் கூட, முன்னர் ஜன.24, 2016ல் வேறு ஒரு இணையதளத்தில் இதே புகைப்படங்களுடன் கேள்வி எழுப்பிய வண்ணம் செய்தியாக வெளியானது குறிப்பிடத் தக்கது. மீண்டும் மீண்டும் வாட்ஸ் அப் சுற்றில் வலம் வருவது போல், இந்தச் செய்தி வந்து பரபரப்பைக் கிளப்பியது.

குறிப்பாக பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில், தாங்கள் பார்த்ததை உடனே பகிர்வது பலருக்கும் கைவந்த கலை. அதன் உண்மைத் தன்மையோ,  பின்னணியோ, உள்ளிருக்கும் வார்த்தைகளையோ, செய்தியையோ, அதன் உள்நோக்கத்தையோ, விளம்பரத்தையோ எதையும் கவனிக்காமல் அப்படியே பகிர்வதுதான் பெரும்பாலானவர்களின் பழக்கம்.

அதனை இந்தச் செய்தியும் எடுத்துக் காட்டி, எதையும் தாங்கள் நம்பிக் கொண்டு ஒரு தீர்மானத்துக்கு வரும்முன், அப்படியே அடுத்தவருக்கு அதைத் தள்ளிவிடும் கிசுகிசு பேர்வழிகள்தான் நாம் என்பதை உணர்த்தக் கூடிய வகையில் இந்தச் செய்தியை அந்த இணையதளம் வெளியிட்டது.

இப்படிப்பட்ட செய்திகளையும் நம்பிக்கொண்டு எத்தனை பேர் அதைப் பகிர்ந்திருக்கிறார்கள் என்பது தான், இந்தக் கேலியின் உள்நோக்கம்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...