கொள்ளையனை மூதாட்டி செருப்பாலடித்த வீரத்தை டிவிட்டி … அஜித், விஜய் ரசிகர்களை தூண்டிலிட்ட ஹர்பஜன்!

இந்நிலையில், கொள்ளையர்கள் விரட்டப்பட்ட காட்சிகளை டிவிட்டரில் பகிர்ந்து பிரபல நடிகர் அமிதாப் பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில்... 

கொல்ல வந்த கொள்ளையர் அரிவாளுடன் மிரட்டிய போதும் அவர்களை அடித்துத் துரத்திய முதிய தம்பதியின் வீரம் இப்போது சமூகத் தளங்களில் பலராலும் கொண்டாடப் படுகிறது. இது துணிச்சலான செயல் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். அதை இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்க்ஸின் செல்லப் பிள்ளையுமான ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பதிவில் பாராட்டியுள்ளார்.

நெல்லை மாவட்டம் கடையத்தை அடுத்த கல்யாணிபுரத்தில் சண்முகவேல் என்ற முதியவரின் தோட்ட வீட்டில் இரு தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் மூகமுடி அணிந்த கொள்ளையர்கள் இருவர் புகுந்தனர். சண்முகவேல் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, அவர் பின்புறம் வந்த கொள்ளையன் ஓசைப்படாமல் மெள்ள வந்து கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி, அவரை நிலைகுலையச் செய்து, கீழே தள்ள முயன்றான்.

ஆனால், அவனிடம் இருந்து தப்பிக்கப் போராடிய சண்முகவேல் எழுப்பிய சத்தம் கேட்டு வீட்டுக்கு உள் இருந்து வந்த அவரது மனைவி செந்தாமரை கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் எடுத்து எறிந்து, கொள்ளையர்களை திணறடித்தார். இதனால் கொள்ளையன் பிடியில் இருந்து சண்முகவேல் தப்பினார். பின் தம்பதி இருவரும் சேர்ந்து நாற்காலி, ஸ்டூல் என கிடைத்த பொருள்களை எல்லாம் எடுத்து எறிந்து கொள்ளையரை விரட்டினர்.

இந்தக் காட்சிகள் அவர்களது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அவை இன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனால் இந்த முதிய தம்பதி இன்று பாராட்டு மழையில் நனைந்து வருகின்றனர்.

இந்நிலையில், கொள்ளையர்கள் விரட்டப்பட்ட காட்சிகளை டிவிட்டரில் பகிர்ந்து பிரபல நடிகர் அமிதாப் பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில்…

அதே போல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனக்கே உரிய பாணியில் தமிழில் அசத்தலாக டிவிட்டியுள்ளார். அவரது டிவிட்டர் பதிவுக்கு சுவாரஸ்யமாக பதில் கொடுத்துள்ளனர் பலர்.

ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.என்ன #வீரம் பாசத்துக்கு முன்னாடி நான் பனி பகைக்கு முன்னாடி #புலி ன்னு சொல்ர மாதிரி #மெர்சல் காட்டிட்டாங்க.இது தமிழனின் #நேர்கொண்டபார்வை.
Hats-off to the elderly couples of Thirunelveli who fought with Robbers’’ என பதிவிட்டுள்ளார்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...