பராசக்தி ஒன்றேதான் உண்டு! (பாரதியின் நினைவில்)

அவனைப்போல் நல்லகவி உண்டா? – அவன்
அகத்தைப்போல் வெள்ளைப்பூ உண்டா?
அவனைப்போல் தேசபக்தர் உண்டா? – அவன்
அன்பைப்போல் காமதேனு உண்டா?.

அவனைப்போல் பிள்ளைகுணம் உண்டா? – அவன்
அறிவைப்போல் சோதியொளி உண்டா?
அவனைப்போல் பாசமுளோர் உண்டா? – அவன்
அகத்தாழ்ந்து முத்தெடுத்தோர் உண்டா?.

அவனைப்போல் ஞானமுளோர் உண்டா? – வாணி
அருள்வாக்கைத் தான்பெற்றோர் உண்டா?
அவனைப்போல் துன்புற்றோர் உண்டா? – அட
அப்போதும் இன்பமேன்றோர் உண்டா?.

பாரதியே பாரதியே உன்போல் – இந்தப்
பாரினிலே யாரய்யா உண்டு
பாரதியே பாரதியே உன்போல் – ஆதி
பராசக்தி ஒன்றேதான் உண்டு.

  • கவிஞர் மீ.விசுவநாதன்

(இன்று (11.09.2019) மஹாகவி பாரதியார் நினைவுதினம்)

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...