Home இலக்கியம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் ‘தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்’ பன்னாட்டுப் பயிலரங்கம்!

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் ‘தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்’ பன்னாட்டுப் பயிலரங்கம்!

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி நூலகத்துறை மற்றும் தமிழ் அநிதம் ( அமெரிக்கா ) இணைந்து ஜன.25 அன்று “தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” என்னும் தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டுப் பயிலரங்கத்தை நடத்தின.

ஜன. 25 சனிக்கிழமை, திருவள்ளுவர் கல்லூரி வளாகத்தில் உள்ள தவத்திரு குன்றக்குடி அடிகளார் அரங்கத்தில் இந்தப் பயிலரங்கம் நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர் சு.சுந்தரம் தலைமை உரை நிகழ்த்தினார். தொடர்ந்து நான்கு அமர்வுகளாக இந்தப் பயிலரங்கம் நடைபெற்றது.

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி நூலகத்துறை மற்றும் தமிழ் அநிதம் அமெரிக்கா இணைந்து ஜன25 அன்று நடத்திய தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும் என்னும் பொருண்மையிலான பன்னாட்டுப் பயிலரங்க நிகழ்வில் மின் நூலாக்கம் குறித்த விளக்கம்

முதல் அமர்வில் ஓய்வு பெற்ற பேராசிரியர் அ.காமாட்சி, ஏற்றம் தரும் எழுது கருவிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். ராஜபாளையத்தைச் சேர்ந்த பெய்கான் தொழில்நுட்ப பயிற்சி மைய நிறுவனர் மு.செந்தில் முருகன், ஒலி-ஒளி உள்ளடக்கம் குறித்து பேசினார்.

மூன்றாம் அமர்வில், வலை ஊடக வாய்ப்புகள் குறித்து வல்லமை. காம் ஆசிரியர் அண்ணா கண்ணன் கலந்துரையாடினார். நான்காம் அமர்வில் தினசரி டாட் காம் ஆசிரியர் செங்கோட்டை ஸ்ரீராம், மின்னூல் உருவாக்கம் குறித்து விளக்கிக் கூறினார். இதுபோன்ற பயிலரங்கு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், நம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்ள மனபலம் தருவதாகவும் பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறினர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version