திருமயிலை திருக்கல்யாண அழைப்பிதழ் : கிரேஸி மோகன் கவிதை

mylapore-kapaleeswarar-and-karpagambal “செல்வன் கபாலியை செல்வியுமை கற்பகம் கல்யாணம் செய்தவன் கைத்தலம்-செல்லும் தினம்நாளை சேர்வீர் திருமயிலாப் பூர்க்கு இனம்ஜாதி இல்லை இதற்கு”…. “கைத்தலம் பற்றி கபாலியும் கற்பகமும் நெய்த்தலம் சுற்றி நடந்தனர் -மெய்த்தவ வேதியர் ,மாலயன் ,வானோர் குழுமிட ஆதியின் பாதி அளிப்பு”…. “அன்னைக்கும் தந்தைக்கும் ,அர்த்தமதன் சொல்லுக்கும் புன்னைக்கும் பூங்கொடி பெண்ணுக்கும் -இன்னைக்கு கையோடு கைகோர்க்கும் கல்யாண உற்ச்சவம் மொய்யெழுதும் நேரமிது மெய்க்கு”…. “குங்குமமும் வெண்ணீறும் கூடிக் கலந்தின்று சங்கமம் ஆகுது சன்னிதியில் -தங்களை வாயாரக் கேட்கிறேன் வந்திதைக் காணவினை நோயாறிப் போகும் நொடித்து”…. “பங்குனி உத்திரத்தில் சங்க ரனுமையாள் பங்குநீ என்றுதன் பாகத்தை -மங்களமாய் தந்த மணநாளாம் இன்று மயிலையில் வந்து வடுக்களை வாழ்த்து”…. பலன்…. “கைத்தலம் பற்றிய கற்பகத்தின் காதலால் மெய்தலப் பாதி மகிந்தளித்த -வைத்திய பாகனின் பாதம் பணிய சனிபகவான் நோகான்நம் பாகம் நளன்”…. – கவிதை: கிரேஸி மோகன்