September 19, 2021, 10:10 pm
More

  ARTICLE - SECTIONS

  வானொலி ஒலிபரப்புத் துறையில் சாதித்த ஆளுமை பி.ஆர்.குமார்

  சென்னை வானொலி நிலையத்தில் தலைமை இயக்குனராக இருந்த பி.ஆர்.குமார் Kumar Radhakrishnan Balasubramanianகாலமாகிவிட்ட தகவலை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார் வானொலியில் பணிபுரியும் நண்பர் ராமஸ்வாமி சுதர்ஸன் Sudarsan.

  படித்ததும் கனத்த மௌனம் ஆட்கொண்டது. சில நிமிடங்கள் அவர் குறித்த நினைவுகள்தான் என்னில் நிரம்பின.

  2000 ஆவது வருடம். நான் 24 வயதான அரைகுறை. என் பத்திரிகையுலக துவக்க கட்டத்தில் ஒரு நாள் மயிலாப்பூரில் நான் குடியிருந்த நாட்டு சுப்புராயன் தெருவில் மறுமுனையில் இருந்த டாக்டர் சேயோன் இல்லத்துக்கு தீபாவளி மலருக்காக ஒரு கட்டுரை கேட்டுச் சென்றிருந்தேன். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தபோது, சொந்த ஊர் பேச்சு வந்தது. அதே திருநெல்வேலி, தச்சநல்லூர் என்றெல்லாம் ஒருவர் பின் ஒருவராகப் பேசிக் கொண்டிருந்ததில், அவர் சொன்னார்… தம்பி உன் குரலும் கலகலப்பும் நல்லா இருக்கே… நீ நம்ம ஸ்டேஷன்ல பார்ட் டைம் அனௌன்ஸருக்கு அப்ளை பண்ணலாமே! என்றார்.
  அந்த உந்துதலில் 2001ல் சென்னை வானொலியில் மூன்று கட்ட தேர்வுகள் முடித்து பகுதி நேர அறிவிப்பாளராக பத்திரிகைப் பணியில் இருந்து கொண்டே செய்தேன்.

  ஒரு நாள் நான் ஒலிபரப்பு பணியில் ஸ்டூடியோவில் இருந்த போது, திடீரென வந்தார், வானொலி, தூர்தர்ஷன் கேந்திராவின் டிடிஜியாக இருந்த ஸ்ரீ. பி.ஆர்.குமார். தனியாக வந்தவர், சில நிமிடங்கள் என் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு நின்றிருந்தவர், ஒரு புன்முறுவலுடன் சென்றுவிட்டார். பின்னர், அவர் அறைக்குச் சென்று என்னை அறிமுகப் படுத்தி வைத்தார் நண்பர்.

  அந்த அறையே அவ்வளவு அமைதியாக, மனதுக்கு இதமான சூழலைத் தந்ததை உணர்ந்தேன். மேஜையில் ரமண மகரிஷியின் படம். இவர், ரமண மகரிஷியின் அதிதீவிர பக்தர் என அறிந்து கொண்டேன். அழுத்தமான அமைதி கலந்த பேச்சு அவருடையது. நல்ல நிர்வாகி. எந் நிலையிலும் கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விடாத, அதே சமயம் நுணுக்கங்கள் நிரம்பிய அறிவாளி என்பதால் அவரை மனத்தளவில் மதிப்பவர்கள் அனேகம் பேர் அங்கே இருந்தார்கள்.

  பல இடங்களில் பார்த்திருக்கிறேன்… தலைமைப் பதவியில் இருப்பவரை குற்றம் குறை சொல்லாமல், கரித்துக் கொட்டாமல், திட்டாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு! ஆனால் பி.ஆர்.குமார் சார் என்றால் அவர்களின் முகத்தில் தெரியும் மரியாதை கலந்த ஸ்நேக பாவத்தை கண்டு மலைத்திருக்கிறேன்.
  பின்னர் அவருடனான சந்திப்பு அதிகரித்தது.

  அடிக்கடி பேசிக் கொள்வோம். நிலைய தலைமை இயக்குனர் என்ற கர்வமோ பந்தாவோ படாடோபமோ சிறிதும் தலைகாட்டாத அமைதி.
  ரமண மகரிஷி குறித்த பேச்சு வரும். ரசித்துக் கேட்பேன். 2002ல் கலைமகள் அலுவலகத்தில் பணியில் சேர்ந்த போது, அவருடைய ரமண மகரிஷி குறித்த கட்டுரைகள் தீபாவளி மலர்களில் தவறாமல் இடம்பெறுவதைக் கண்டேன். மஞ்சரியிலும் அவரிடம் இருந்து கேட்டுப் பெற்று ஓரிரு கட்டுரைகள் பிரசுரித்திருக்கிறேன். குறைந்த கால அனுபவம்தான். அதற்குள் அவர் பணி ஓய்வு பெற்றுவிட்டார்.

  பின்னரும் சில நிகழ்ச்சிகளில் பார்க்கும் போது விசாரிப்பார். குறிப்பாக நினைவுக்கு வருவது… செங்கோட்டை ஆவுடையக்காள் குறித்த புத்தகத்தை திருக்கோவிலூர் தபோவனம் வெளியிட்டது. நாரதகான சபாவில் வெளியீடு. ஸ்வாமி ஸ்ரீஸ்ரீகிருஷ்ண ப்ரேமி அண்ணா தலைமை! பெரிய நிகழ்ச்சி. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன் எங்கள் ஊர் நினைவுகளுடன்! நிகழ்ச்சி முடிந்ததும், ஸ்ரீஸ்ரீ அண்ணாவிடமும், தபோவனம் ஸ்வாமிஜியிடமும் என்னை பெருமையுடன் அறிமுகப் படுத்தினார்… இவர் செங்கோட்டைங்கிறது அடுத்த விஷயம். இவர் எங்க ரேடியோ ஸ்டேஷன் தயாரிப்பு~ என்று!

  பின்னர் தொடர்ந்தது பேஸ்புக்கில் தொடர்பு! அடிக்கடி இன்பாக்ஸில் செய்தியைப் பரிமாறுவோம். தேவைப்பட்ட தகவல்களைக் கேட்டுப் பெறுவேன். இசை உலகம், ஆன்மிக உலகம், ரமணர் என ரெஃப்ரன்ஸ், க்ராஸ் செக் என என் இதழியல் தேவைக்கான வழிகாட்டியாகவும்! அண்மைக் காலமாக உடல் நலம் குன்றியிருந்தாரென தெரிகிறது.

  அன்னாருக்கு என் இதய பூர்வமான அஞ்சலி!

  சுதர்ஸன் பகிர்ந்த தகவல்:

  Shri. B.R. KUMAR who retired as Deputy Director General, DDG of AIR passed away today on 7.9.17 at 2.45 PM at a private nursing home in Chennai. He was suffering from acute diabetes and related infections for quite some time. Born on 10.7.1943, Shri. B.R. KUMAR entered service as a Transmission Executive at AIR, Tiruchirapalli on 28.10.1967. Steadily he rose up the ranks and retired on 31.7.2003 as Deputy Director General at AIR, Chennai. He had served in various capacities at many places both in AIR and DDK, including Cuttack, Nagpur, Kolkatta, Puducherry, Tiruchirapalli, Chennai, etc,. Known for his writing skills, especially Radio Plays, Shri. B.R. KUMAR had a penchant for novel techniques in broadcasting. It was he who was instrumental in introducing LIVE Talk shows and interactions through telephones during the later 90’s. He has contributed immensely to various fields of broadcasting, besides being a regular in many magazines in which he has been writing articles and special features. A great loss to the broadcasting fraternity of our country, shri. B.R. KUMAR was known for his no nonsense approach to issues, their speedy resolution and a swift & accurate decision making. The last rites of shri. B.R. KUMAR would be held at his residence at Tiruvanmiyur, Chennai at about 10 AM tomorrow, that is 8.9.17, Friday. May his soul find peace at the Holy Feet of Ramana Maharishi, his spiritual Guru. Om Shanti.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,430FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-