
ப்ரொபஸர் ரஜனீஷ் ஷுக்லவிற்கு முதலாவது பாரதி மண்டன் தர்ஷன்ரத்ன விருது
- செய்தித் தொகுப்பு: ஜெயஸ்ரீ எம்.சாரி
மகாராஷ்டிர மாநிலத்தில் காந்தி மாவட்டம் என்று அழைக்கப்படும் வர்தாவில் இயங்கிவரும் மகாத்மா காந்தி அந்தர் ராஷ்டிரிய ஹிந்தி விஷ்வ வித்யாலயாவின் துணை வேந்தரான ப்ரொபஸர் ரஜனீஷ் குமார் ஷுக்ல அவர்களுக்கு முதலாவது ‘பாரதி மண்டன் தர்ஷன்ரத்ன சம்மான்’ – 2021 விருது சமீபத்தில் வழங்கப்பட்டது.
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகமும் பீகார் மாநிலத்தின் கலை பண்பாடு மற்றும் இளைஞர் துறையும் இணைந்து
படோஹி சஹர்ஸா என்னும் இடத்தில் நடத்திய மூன்று நாள் வைதேகி அந்தர்ராஷ்டிரிய மஹோத்சவத்தின் போது ப்ரொபஸர் ஷுக்லவிற்கு இந்த விருது வழங்கப்பட்டது.
பீகாரின் கலை மற்றும் கலாச்சார அமைச்சர் அலோக் ரஞ்சன் அவர்கள் பத்மஸ்ரீ நிரஞ்சன் கோஸ்வாமி மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர் டாக்டர் பிரகாஷ் பாரதி முன்னிலையில் இந்த விருதை வழங்கினார்.
வைதேகி கலை மியூசியத்தையும் விருந்தினர்கள் இந்நிகழ்ச்சியில் மக்களுக்காக அர்ப்பணித்தனர்.
அமைச்சர் ரஞ்சன் தன்னுடைய உரையில் “ப்ரொபஸர் ரஜினிஷ் ஷுக்ல அவர்கள் கல்வித்துறையில் ஆற்றிய பணிகளை விவரித்தார். அவரைப்போன்ற ஒரு கல்வியாளரை பாராட்டி விருது வழங்குதல் என்பது பீகார் மாநிலத்திற்கு ஒரு கௌரவமான விஷயமாகும்,” என்றார்.
ஒரு கவிஞராகவும் அறியப்படும் ப்ரொபஸர் ஷுக்ல பல தேசிய அமைப்புகளில் பணியாற்றியபோது தேசிய கல்வி மற்றும் பண்பாடு குறித்த கொள்கைகளை வகுப்பதில் தான் ஒரு சிறந்த நிர்வாகி என நிரூபித்துள்ளார்.
இந்தியத் தத்துவ ஆராய்ச்சி குழுமம் மற்றும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி குழுமம் ஆகியவற்றில் உறுப்பினர் செயலாளராக பதவி வகித்துள்ளார். கௌரவ்ஷாலி சன்ஸ்க்ருதி, Western Philosophy and Introduction, பாரதீய தர்ஷண் கே பசாஸ் வர்ஷ, Prospective and Comparative Religion போன்ற பல படைப்புகள் வாசகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்திய கலை மற்றும் பண்பாடு துறையில் அவர் ஆற்றிய பணியை பாராட்டும் விதமாக பாரதிய மண்டன் தர்ஷன்ரத்ன சம்மான்-2021 விருது வழங்கப்பட்டது.
ப்ரொபஸர் ஷுக்ல
தன்னுடைய ஏற்புரையில் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார். வைதேகியின் பாதங்கள் பட்ட மிதிலாஞ்சலில் கலை மியூசியம் நிறுவியதை பாராட்டியதோடு, மியூசியத்தின் செயல்பாடுகளுக்காக தான் எப்போதும் உதவி செய்வதற்கு தயாராய் இருப்பதாகவும் தெரிவித்தார். ப்ரொபஸர் ரஜனீஷ் ஷுக்ல அவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
போட்டோ கேப்ஷன்:
முக்கிய விருந்தினர்கள் ப்ரொபஸர் ரஜனீஷ் ஷுக்லவிற்கு விருந்து வழங்கி சிறப்பித்த போது எடுத்த படம்