எட்டையபுரத்தில் பாரதி பிறந்த நாள் விழா டிச.11 அன்று கொண்டாடப்பட்டது. இதில், எழுத்தாளர்கள் ‘ஆணைவாரி’ ஆனந்தன், ‘தமிழ்நண்பன்’ சரவணபாரதி உள்ளிட்டோருக்கு பாரதி இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டன.
பாரதியார் மணிமண்டபத்தில் நடைபெற்ற விழாவில் எழுத்தாளர் தமிழ்நண்பன் தி. சரவணபாரதிக்கு பாரதி பணிச்செல்வர் விருதையும், கவிஞர் ஆணைவாரி ஆனந்தனுக்கு பாரதி இலக்கியச்செம்மல் விருதையும் வழங்கினார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் முனைவர் மாலினி அனந்தகிருஷ்ணன். அப்போது, எழுத்தாளர் சங்கத் தலைவர் கோ, பெரியண்ணன், பொதுச்செயலர் இதயகீதம் ராமானுஜம் ஆகியோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் (டிசம்பர் 11) மகாகவி பாரதியின் 142 வது பிறந்தநாள் பெருவிழா அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது.
பன்னாட்டு கருத்தரங்கம்: கலசலிங்கம் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக் கருத்தரங்கில் ஆஸ்திரேலியாவில் உள்ள அகில உலகத் தமிழ் முழக்க களம் அமைப்பின் நிறுவனர் முனைவர் மாலினி ஆனந்தகிருஷ்ணன், இலண்டன் ஐக்கிய ராஜ்ய தமிழ் துறை, எழுத்தாளர் இந்திரநீலன் சுரேஷ் மற்றும் நைஜீரியாவை சேர்ந்த எழுத்தாளர் கல்யாணி ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு திசை காட்டும் பாரதி எனும் தலைப்பில் பன்னாட்டு உரை நிகழ்த்தினர்.
கலசலிங்க பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் சங்கீதா வரவேற்றார். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் இதய கீதம் ராமானுஜம் நோக்க உரையாற்றினார். தேசிய தலைவர் முனைவர் கோ. பெரியண்ணன் தொடக்க உரையாற்றினார்.
கலசலிங்க பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் ஸ்ரீதரன், இணை வேந்தர் முனைவர் அறிவழகி ஆகியோர் தலைமை உரையாற்றினர். பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இளம் பாரதி மற்றும் மகாகவி பாரதி விருதுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகிகள் புலவர் நாக சொக்கலிங்கம் , அக்கினி பாரதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இசைக்கவி சண்டமாருதம் நன்றியுரையாற்றினார். விழாவில் கலசலிங்க பல்கலைக்கழக தமிழ் துறை மாணவர்கள், பேராசிரியர்கள், தன்னார்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பாரதியார் ஊர்வலம் : இவ்விழாவிற்கு முன்னதாக பாரதியார் பிறந்த எட்டையபுரம் இல்லத்தில் உள்ள பாரதியார் உருவ சிலைக்கு அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதன் தொடர்ச்சியாக பாரதியார் நினைவு ஊர்வலம் நடைபெற்றது.
விருதுகள் வழங்கல் : இதைத்தொடர்ந்து பாரதியார் மணி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பாரதி அன்பர்களுக்கு பாரதியார் இலக்கிய விருது மற்றும் பாரதி பணிச் செம்மல் விருதுகள் வழங்கப்பட்டன.
சேத்தியாதோப்பு தமிழ்ச் சங்கத் தலைவர்
கவிஞர் ஆணைவாரி ஆனந்தனுக்கு பாரதி இலக்கிய விருதும், எழுத்தாளர், தமிழ்நண்பன் தி. சரவணபாரதிக்கு பாரதி பணிச்செல்வர் விருதும் வழங்கப்பட்டன.
தகவல் : கவிஞர் அக்னிபாரதி, (மக்கள் தொடர்பாளர், எழுத்தாளர் சங்கம்)