எழுத்தாளர்- பதிப்பாளர் ஒழுங்காற்றும் சட்டம்:
The Writers and Publishers Regulating Act
தமிழ் நாட்டில் எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் பெருகி வளர்ந்து இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
இதன் வளர்ச்சியில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக்கண்காட்சி நடைபெறுவது வாசகர்களுக்கு ஒரு திரு விழா போல் பயன்படுகிறது. சென்னையில் 47 வது புத்தகக்கண்காட்சி ஜனவரி 3 முதல் ஜனவரி 21 வரை நடைபெற்று 10 கோடிக்கு புத்தக விற்பனையான செய்தி அறிந்து மகிழ்ச்சி.
நான் இப்போது அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பிரிஸ்கோ நகரிலுள்ள மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன். அப்போது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் சிறுகதையைப் படித்து விட்டு இரவில் உறக்க வரவில்லை; காரணம் ஒரு எழுத்தாளருக்குப் பதிப்பாளரால் ஏற்பட்ட அவமான அதிர்ச்சியாகும். இந்த அவமானம் இனி வளர்ந்து வரும் காலத்தில் எந்த எழுத்தாளருக்கும் வரக்கூடாது என்னும் நோக்கில் இப்பதிவை எழுதியுள்ளேன்.
சென்னையில் பிரபஞ்சனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர் குறிப்பிட்டது” எனக்கு இரண்டு வேளை உணவுக்கு உத்தரவாதம் கிடைத்தால் நான் இன்னும் பல படைப்புகளைத் தமிழுக்குத் தர முடியும்” என்று குறிப்பிட்டார். இவ்வளவு நாவலும், சிறுகதையும் எழுதியும் பதிப்பாளர்கள் ராயல் சொற்பானது என்று உணர முடிந்தது.
பதிப்பக வகைகள்:
- எழுத்தாளர்களிடம் படைப்புக்களை விரும்பி வாங்கி வெளியிடும் பதிப்பகங்கள்
- எழுத்தாளர்கள் பதிப்பகங்களைத் தேடிப் போய் படைப்புக்களை வெளியிட வேண்டியதால் வெளியிடும்
பதிப்பகங்கள் - எழுத்தாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு நூல்கள்
வெளியிடும் பதிப்பகங்கள்
ஆனால் முதல் வகை பதிப்பகம் எழுத்தாளருக்குக் கொடுக்கும் ராயல்டி 10% கொடுக்கிறார்கள்.
மற்ற பதிப்பகங்கள் ராயல்டி என்பதைக் கொடுப்பதே இல்லை. எழுத்தாளர்கள் தம் நூல் பதிப்பகத்தின் வழியாக வெளிவந்த மகிழ்ச்சியில் இன்றும் இருக்கிறார்கள்.இது பற்றித் தெரிந்து தான் எழுத்தாளர் எஸ் . இராமகிருஷ்ணன் தேசாந்திரி பதிப்பகம் தொடங்கித் தம் நூல்களை விற்பனை செய்து வருகிறார். - எழுத்து இதழ் நடத்திய எழுத்தாளர் சி. சு செல்லப்பா தாம் எழுதிய நூல்களை விபனை செய்ய ஊரெல்லாம் சுமந்து வாயதான காலத்தில் சிரமப்பட்டார். அதுபோல் தாஸ்தாவெஸ்கி வாழ்க்கை வரலாற்றை மலையாளத்தில்
பெரும்படவம் ஶ்ரீதரன் எழுதினார். அதில் தாஸ்தாவெஸ்கி பதிப்பாளரிடம் வாங்கிய பணத்துக்கு உரிய தேதியில் நூல் எழுதிக் கொடுக்க எதிர்கொண்ட நெருக்கடிகளை விவரித்துள்ளார். மலையாளத்தில் இது 4 லட்சம் பிரதிகள் விற்பனையாகியது. இதைக் கவிஞர் சிற்பி
தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதை ஒரு பதிப்பகம் முதல் பதிப்பை வெளியிட்டு அரசு நூலாகத்துக்கு விற்பனை செய்து விட்டது.பெரும்பாலும் பதிப்பங்கங்கள் முதல் பதிப்பைப் போட்டு விற்பனை செய்து விடுவதால் இரண்டாம் பதிப்பு வராத பல நூல்கள் குவிந்து கிடக்கின்றன. கவிஞர் சிற்பி இம்மொழிபெயர்ப்பு நூல் இரண்டாம் பதிப்பை வெளியிட விரும்பியதால் எழுத்தாளர் சா. கந்தசாமி
வேறொரு பதிப்பகத்தில் வெளியிட ஏற்பாடு செய்தார்.
இன்னும் ஒரு பிரச்சனை அரசு நூலகத்துக்கு நூல் விற்பனை என்பது 2015 வரை சரியாக நடந்தது. அதற்குப் பிறகு பதிப்பகங்கள் கூட்டணி அமைத்துப் பணம் கொடுத்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் செய்து சிறிய பதிப்பங்களை நசுக்கி விட்டார்கள். ஆனால் இன்னும் பலர் பணம் பெறாமல் சிரமப்படுகிறார்கள்.
எனவே தமிழக அரசும் மத்திய அரசும் பதிப்பகச் செயல்பாடுகளை முறைப்படுத்தவும், எழுத்தாளர் ராயல்டியை ஒவ்வொரு பதிப்பிக்கும் இலாபத்தில் விகிதாரத்தை வகுக்கவும், புத்தக விற்பனையை முறைப்படுத்தவும் வல்லுநர் குழு அமைத்துக்
கருத்துருப் பெற்று The Writers and Publisher Regulating Act உருவாக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும்.
இச்சட்டம் வந்தால் அனைத்துப் பதிப்பகமும் பதிவு செய்யப்படுவதால்எழுத்தாளர்- பதிப்பாளர் உரிமை காக்கப்பட்டு எழுத்துலகம் மதிப்பு அடையும் என்பது என் நம்பிக்கை. இது குறித்து நன்கு விபரம் அறிந்தவர்கள் இக்கோரிக்கையை இன்னும் வலுவான ஆதாரங்களுடன் அரசுகளுக்கு முன் வைக்க விரும்புகின்றேன்.
- சுபாஸ் சந்திர போஸ்
+91 94431 62085
[email protected]