வீட்டுக்கே ஆள் அனுப்பி…. கடிதம் கொடுத்து… : பொங்குகிறார் ஜெயகாந்தன் மகள் !

Deepalakshmi எழுத்தாளர் ஜெயகாந்தன் தன் கடைசி நாட்களில், குமுதத்தில் வெளிவரும் வைரமுத்து சிறுகதைகளைப் படித்தும் படிக்கச் சொல்லிக் கேட்டும் வந்தார் என்று அறிந்ததாகவும், அதுகுறித்த அவரது அபிப்ராயத்தைப் பதிவு செய்ய முடியுமா என்று அன்போடு கேட்டதாகவும், அதை ஒருகடிதமாக வைரமுத்துவின் வீட்டுக்கே ஆள் மூலம் அனுப்பி விட்டதாகவும் குமுதத்தில் வெளியானது. ஆனால், இவற்றை மறுத்து, எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகள் தீபலட்சுமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு தகவலை எழுதியுள்ளார். அது….. [su_quote]சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது: இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும். அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன். ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், ‘உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா’ என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே! அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று! அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது.[/su_quote] தீபலட்சுமியின் பேஸ்புக் பதிவு:

சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது:இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் … Posted by Deepa Lakshmi on Monday, April 20, 2015


குமுதம் வார இதழில் வெளியான அந்தக் கடிதமும், செய்தியும்: JK1-horz கவிஞர் வைரமுத்து ஏற்கெனவே விகடன் மேடையில் ஜெயகாந்தன் குறித்து ஒருமுறை ஒரு கருத்தை எழுதியிருந்தார். அது ஜெயகாந்தனின் ஆளுமையை வெளிப்படுத்தும் விதத்தில் இருந்தபோதும், இளையராஜா ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. வைரமுத்து எழுதிய அந்தச் செய்தி : [su_quote] ஒரு நாள் காலையில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. நான் ஜெயகாந்தன் பேசுகிறேன். வணக்கம். வைரமுத்து பேசுகிறேன். என் மகள் திருமண வரவேற்புக்கு உங்கள் மண்டபம் தேவைப்படுகிறது. அது உங்கள் மண்டபம்; எடுத்துக்கொள்ளுங்கள். ‘பொன்மணி மாளிகை’ பெயரிட்டுத் திருமண அழைப்பிதழ் அச்சிட்டவர், ஓர் இசையமைப்பாளரைச் சந்தித்து அழைப்பிதழ் தந்தாராம். ‘கட்டாயம் வருகிறேன்’ என்ற உறுதிமொழி தந்து அழைப்பிதழைப் பிரித்த இசையமைப்பாளர், திருமண மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும் திகைத்துப்போனாராம். ‘நான் அங்கு வர முடியாதே’ என்று நெளிந்தாராம். விசுக்கென்று எழுந்து வாசல் வரை சென்ற ஜெயகாந்தன் விறுவிறுவென்று திரும்பிவந்து, ‘நீதான் திருமணத்திற்கு வரப்போவதில்லையே! உனக்கெதற்கு அழைப்பிதழ்?’ என்று அழைப் பிதழைப் பறித்துக்கொண்டு வெளியேறிவிட்டாராம். இந்தச் சம்பவத்தை ஒரு நண்பரின் வாய்மொழியாக அறிந்தேன். கண்ணதாசன் வரியைப் பொருத்தி ஜெயகாந்தனை நினைத்துக்கொண்டேன். சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? [/su_quote] ஆக இலக்கிய உலகில் எத்தனையோ தவறான ஆவணப் படுத்தல்கள் நிகழ்ந்துவிட்டதுண்டு. மறைந்து போன ஒருவர் குறித்து மனத்தில் தோன்றியதெல்லாம் கூறும் கலாசாரத்துக்கு வித்திட்டவர்கள் இங்கே இருப்பதால், இதனைப் பதிவு செய்து ‘ஆவணப் படுத்த’ வேண்டிய கட்டாயச் சூழல் இலக்கிய உலகில் நமக்கும் எழுந்துள்ளது. செய்தி பகிரல்: செய்திகள். காம்