Home இலக்கியம் தெரியாத கனவுகள் -கவிதை நூல் வெளியீடு!

தெரியாத கனவுகள் -கவிதை நூல் வெளியீடு!

“தெரியாத கனவுகள்” கவிதை நூலினை கல்விச் செம்மல் தனசேகரன் வெளியிட பேராசிரியை மாலதி செந்தில் பெற்றுக் கொண்டார். உடன் நூல் ஆசிரியர் ஆ.செல்வராஜ் தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன்.

கரூரில் இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டுநிகழ்வில் பேசிய மேலை பழநியப்பன், கருத்தை விதைப்பது கவிதைகள் கவிஞன் உணர்ச்சியை தூண்டக்கூடியவன் கவிதைகள் மனிதனை தட்டி எழுப்பும் வல்லமை கொண்டவை. சுதந்திரப் போராட்ட காலத்தில் கவிஞர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நாடு விட்டு நாடு கடத்துவது

கவிஞர் ஆ.செல்வராஜ் தன் கவிதையில் வீதியில் வீரம் வீறு கொண்ட நாதம் சங்கே முழங்கு ஜாதிகள் ஒழியவே ! என்கிறார்.

வருங்காலத்தில் விருதுகளை விலைபேசப் போவதில்லை எனத் தொடரும் கவிதையில் நமக்கு எதற்கு இனி சந்தன ஜவ்வாது ஆரங்கள்? எனக் குமுறுகிறார்.

வாருங்கள் ஆண்டவன் கருவறைக்குள் – ஆன்மீகத்தை ஆராய்ந்து பார்க்க! என்றும் பாடுகிறார் என்றார்

கவிஞர் கருவூர் கன்னல் பேராசிரியை இளவரசி உள்ளிட்ட பலர் வாழ்த்தினர் ஆ.செல்வராசு ஏற்புரை ஆற்றினார்!

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version