Home கட்டுரைகள் முன்னோர் தந்த… சுற்றுச்சூழல் மந்திரம் இது!

முன்னோர் தந்த… சுற்றுச்சூழல் மந்திரம் இது!

thiruvedagam vivekananda college yoga day
thiruvedagam vivekananda college yoga day

“ஓம் மதுவாதா: ருதாயந்தே மதுக்ஷரந்தி ஸிந்தவ:
மாத்வீர்ன: ஸந்து ஓஷதீ:
மது நக்த்த முதோஷஸி மதுமத் பார்த்திவம் ரஜ: மதுத்யௌரஸ்துந: பிதா
மதுமான்னா: வனஸ்பதிர் மதுமான் அஸ்து
சூர்ய! மாத்வீர் காவோ பவந்துந:
ஓம் சாந்தி சாந்தி சாந்தி:

சிறந்த செயலைச் செய்ய விரும்புகிற நம் அனைவருக்கும் காற்று இனிமையாக வீசட்டும்! நதிகள் இனிமையான தூய்மையான நீருடன் ஓடட்டும்! செடிகொடிகள் நல்ல வளத்துடன் இனிமை அளிப்பவையாக விளங்கட்டும்! இரவும் பகலும் இனிமையைத் தரட்டும்! பூமி இனிமையைத் தருவதாகுக! நம் அனைவருக்கும் தந்தையான வானம் இனிமையைப் பொழியட்டும்! சூரியன் இனிமையைத் தரட்டும்! பசுக்கள் நம் அனைவருக்கும் இனிமையாக பால் கொடுக்கட்டும்! என்பது இதன் பொருள்.

நம் முன்னோர்களின் சுற்றுச்சூழல் குறித்த சிந்தனைகளின் சிறப்பை விளக்கும் வேத மந்திரங்களில் இதுவும் ஒன்று. காற்று பூமி நதி ஆகாயம் அனைத்தும் இனிமையை வழங்கட்டும் என்று அன்போடு பிரார்த்தனை செய்கிறது இந்த மந்திரம். இயற்கையை நாம் தூய்மையாக பாதுகாத்தால்தான் அது நமக்கு இனிமையை வழங்கும். அதனால் சுற்று சூழலை தூய்மையாக வைத்திருக்கும்படி நமக்கு அறிவுறுத்தும் சுலோகம் இது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version