
அஞ்சலி: சாருகேசி ஓர் அருமை நண்பர்
எஸ். விசுவநாதன் என்ற சாருகேசியை நான் சந்தித்தது 1958ல் ராஜாஜி ஹாலில் நிகழ்ந்த எழுத்தாளர் சங்கக் கூட்டத்தில் அப்போதுதான் கண்ணனில் என்னுடைய ஓரிரண்டு கதைகள் பிரசுரமாகியிருந்தன; அவருடைய கதைகளும் வெளிவந்திருந்தன.
உற்சாகமாக, கண்ளான் தொடர்கதைப் போட்டியில் கலந்து கொண்டதை அவரிடம் சொன்னேன். தானும் எழுதியிருப்பதாகக் கூறினார். இரண்டு பேருடைய தொடர்கதைகளும் தேர்வு பெறவில்லை.
கஎனக்கும், சாருகேசிக்கும் ஒரே அலைவரிசை கதைகள் படிப்பது. மாயாவி, ஆர்.வி, எல்லார்வி, சிதம்பர ரகுநாதன் (பஞ்சும் பசியும்). தமிழ்வாணன், ‘குமுதமான’ சிறுகதைகள் என்று வர்ஜாவர்ஜமின்றி படித்துத் தள்ளுவது! திருவல்லிக்கேணியில், பூரத்துடன் லாட்ஜில் தங்கியிருந்தார். வருடம் 1960. ஜெயகாந்தன் விகடன் மூலம் பிரபலமான தருணம்.
பத்திரிகைக் கதைகளின் formulaவை ஒட்டியே, நாங்களிருவரும் எழுதினாலும், கல்கி தீபாவளி மலரில் ‘ரெயில் தண்டவாளத்தில் ஒடும்’ கதையும் ‘எங்கள் டீச்சர்” கதையும் எங்களைக் கவர்ந்தன. சுந்தர ராமசாமியின் நடையா, வித்தியாசமான கதைக் கருவா எதுவென்றே பிடிபடவில்லை.
அறைத் தோழர் பூரத்’ துக்கு தி.ஜா. லா.ச.ரா. இரண்டு பேர் மட்டுமே ஆதர்ச எழுத்தாளார்கள். துயரத்தை வெளிப்படுத்தும் போது, ஜெ.கா. மிகைத் தன்மையை வெளிப்படுத்துகிறார் என்பது அவர் கருத்து- சீரியஸான் அவருடைய கதைகளில் ஒன்று கலைமகள் வண்ணச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது. தலைப்பு ‘கருவளை’ (அசோகமித்திரனின் “வெண்புறா”வும் இந்த வரிசையில்தான் வெளியாகியது.)
மூவரோடு சேர்ந்து, நால்வரானோம் என்பது போல, தே. பார்த்தசாரதி என்பவரும் எங்கள் குழுவில் சேர்ந்தார். பூரம் தவிர. நாங்கள் மூவரும் – தேவன், ரா.கி. ரங்கராஜன் உத்தியை பயன்படுத்தி நகைச்சுவைகள் எழுதி வந்தோம். 1961ல் வெளிவந்த சாருகேசியின் ‘கதவுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ நல்ல ஒரு நகைச்சுவைக் கதை.
விசுவநாதன் விஜயவாடா, அகமதாபாத் (Pல் பணி) போன்ற இடங்களில் பணி புரிந்தபோது கூட. எங்களுக்குள் கடிதத் தொடர்பு இருந்து கொண்டே வந்தது. குமுதத்தில் வெளியான அசோகமித்திரனின் ‘விட்டேன் ஒரு குத்து’ சினிமா உலகம்
பற்றின கதை ஆதவனின் கதையும் அதே இதழில் வெளியாகியது. அசோகமித்திரன் எழுதிய பாணி மிகவும் கவர்ந்தது. போகப் போசு, ஆங்கில நாவல்கள் – அகதா கிறிஸ்டி, இர்விங் வாலஸ் மற்றும்
நெவில் ஹுட் – போன்றவற்றில் எங்கள் இருவரின் ரசனை கூடியது. வாசகர் வட்ட நாவல்களைப் படித்தோம். அம்மா வந்தாள் (தி.ஜா.) சாயா வனம் (சா கந்தசாமி))
கணையாழியில் சாருகேசி எழுதின ஒரு கதை பரிசு பெற்றது (வட மாநிலங்களை வைத்து எழுதப்பட்ட கதை). சென்னையை விட்டு ராயப்பன்பட்டி என்ற ஊரில் மேலாளராக 2% வருடம் பணியாற்றி சென்னை வந்தேன், 1980களில்தான் அவர் ஒரு அசல் பத்திரிகையாளராக உருவானார். கல்கி ராஜேந்திரனை நுங்கம்பாக்கம் இல்லத்தில் சந்தித்து இரண்டு பேருமாக இணைந்து, ‘வாசகர் சிறப்பிதழ்” தயாரித்தோம். இசையுலகப் பிரமுகர்கள் பேட்டி, பாலகுமாரன், லக்ஷ்மி போன்றோருடன் உரையாடல் என்று பல.
அப்போது மயிலை ஒரு ஒட்டலில் காபி அருந்திக் கொண்டிருந்த போது, *“விசுவநாதன் பெயர் ரொம்ப ‘common’ ஆக இருக்கிறது. [சாவி, எஸ்.வி. நாதன், மெலட்டூர் விசுவநாதன்] ஏதாவது புனைப் பெயர் சொல்லுங்களேன்” என்று கேட்டார். அந்த நாளில் பிலஹரி, ஸ்ரீரஞ்சனி போன்ற ராகங்களில் பலர் எழுதி வந்தார்கள். சட்டென்று வந்த யோசனையில் ‘சாருகேசி” என்றேன். (உள்ளபடிக்கே எங்கள் இருவருக்குமே அந்த ராகம் தெரியாது. செம்மங்குடி, மதுரை சேஷகோபாலன் கச்சேரி கேட்பதோடு சரி) ‘சாருகேசி’ என்ற பெயரில் பேசாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’ என்ற கதை கல்கி மலரில் வெளியானது. Public Speaking Course அப்போது சென்னையில் பிரபலமான தருணம்.
1985லிருந்து ஓய்வு பெறும் வரை நான் சென்னையை விட்டு வேறு ஊர்களில், அந்த நாளில் ‘சாருகேசி வளர்ச்சி அபாரமானது- பேட்டிக் கட்டுரைகள். சிறுகதைகள், நாடகங்கள் எழுதிக் குவித்தார். 2000லிருந்து அவர் பன்முக வித்தகரானார்.
இசை விமர்சனம், கலை, சிற்பம் பற்றின கட்டுரைகள். நாட்டியம் பற்றின கட்டுரைகள் 2000 துவக்கத்தில் முதலில் அவர் கட்டுரையை Hinduவில் படித்து வியந்தேன். பிறகு மொழி பெயர்ப்பு, பயணக் கட்டுரைகள், கலாசாரம் போன்ற பல துறைகளில் தடம் பதித்தார். The Hindu (பிப்ரவரி 1)ல் வெளியான கட்டுரைகளே சான்று. தேவன் அறக் கட்டளை நிர்வாகியாக இருந்து பலரைக் கவரவித்தார். நாரதகான சபா செயல் குழு உறுப்பினர்; புத்தக நண்பர்கள் குழுவில் ஒருவர். அவருக்கு தெரியாத பிரமுகர் யாரேனும் உண்டென்றால் – அவர் திரைத் துறையைச் சார்ந்தவராயிருப்பார்.
எனக்கு தனிப்பட்ட விதத்தில் நிறைய உதவியிருக்கிறார். பிரும்மசாரியாகவே வாழ்ந்து குடும்பத்தின் சுமைகளைத் தாங்கியிருக்கிறார். பல எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு மறைமுகமாக ஒத்தாசை புரிந்திருக்கிறார். பட்டியல் நீளும். இந்த 2018 டிசம்பர் சீசனில்தான் The Hindu அவர் கட்டுரைகளைத் தாங்கி வரவில்லை. கொடுமையான நோயால் ஆறு மாதத்துக்கு மேலாக பட்ட அவஸ்தைக்கு, மரணம் ஒரு Relief தான். என்றாலும் எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு “இந்த வாரம் . கதையைப் படித்தீர்களா?” என்று யாரிடம் உரிமையோடு இனிக் கேட்பேன்?
— வாதூலன்