வைரமுத்துவுக்கு ஆண்டாள் பி.சொக்கலிங்கம் எழுதிய ‘அன்பு’ மேலீட்டுக் கடிதம்!

கவிபேரரசு திரு.வைரமுத்து அவர்களுக்கு

ஒரு சாமானிய இந்துவின் நினைவூட்டல் கடிதம்:

அரசியவாதிகள் பலர் எங்கள் தாய்க்கு செய்த அவமரியாதையை மறந்து அவர்களின் அடுத்த வேலைக்கு சென்று இருக்கலாம். தொழிலதிபர்கள் இதையும் தொழிலாக கருதிவிட்டு அவர்களின் அடுத்த தொழிலை கவனிக்க சென்று இருக்கலாம்

ஒரு வேலையும் செய்யாமல் வைரமுத்துவை மேற்கோள் காட்டி வீட்டில் அமர்ந்து பத்து பேரிடம் பணம் வாங்கி எதையும் செய்யாமல் கூட சிலர் சென்று இருக்கலாம்

ஆண்டாளை வைத்து கோடி கோடியாக குவித்தவர்கள் எல்லாம் பேருக்கு கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் இன்னும் ஆண்டாளை வைத்து எப்படி கோடிகளை சம்பாதிக்கலாம் என யோசித்து கொண்டிருக்கலாம்

நான் அரசியவாதியோ,தொழிலதிபரோ,அடுத்தவன் பணத்தில் வயிறு நிரப்புபவனோ கிடையாது. இந்த உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான அதி தீவிர ஆண்டாள் நாச்சியாரின் அன்பு குழந்தைகளில் நானும் ஒருவன்.

இந்த ஒரே தகுதி போதும் திரு.வைரமுத்துவை தனியாக எதிர்த்து நிற்பதற்கு…  கோடிக்கணக்கான அதி தீவிர ஆண்டாள் நாச்சியாரின் குழந்தைகள், ஒவ்வொரு நாளும் எங்கள் தாய் மேல்,என் மதத்தின் மேல் நீங்கள் தொடுத்த தாக்குதலை நினைத்து நினைத்து மாய்ந்து தங்களை உருக்கி கொண்டு இருக்கின்றார்கள்

திரு.வைரமுத்து அவர்களே உங்களுக்கு ஒரு நினைவூட்டல்: உங்களை எதிர்த்து எந்த வித அச்சமும் இல்லாமல் முதல் வீடியோ பதிவை நான் வெளியிட்டேன்.

பின் மதுரையில் இருந்து விமானத்தில் வரும்போது விமானத்தில் வைத்தே உங்களை, நேருக்கு நேராக சந்தித்து நீங்கள் செய்தது தப்பு என்று சொன்னேன். திரு.H.ராஜா அவர்கள் உங்கள் தாயை பற்றி சொன்னதற்காக அவர் சார்பாக பறக்கும் விமானத்திலேயே உங்கள் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டேன்

உரையாடலுக்கு பின் நீங்கள் என்னிடம் உறுதிமொழி கொடுத்தீர்கள் நாளை மறுப்பு வெளியிடுவேன் என்று. சொன்னது போல் இரண்டாம் விளக்கம் என மறுப்பு வெளியிட்டுவிட்டு என்னை தொலைபேசியில் அழைத்தும் உங்கள் மறுப்பை தொலைகாட்சியில் பார்க்க செய்தீர்கள்…,,,

நானும் பார்த்தேன்… ஏனோ நீங்கள் அதிகம் படித்த தமிழ் உங்களை கடைசி வரை மன்னிப்பு என்கின்ற வார்த்தையை உபயோகபடுத்தவிடவில்லை

வருத்தம் மேலும் அதிகரித்தது.. வருத்தத்தின் விளைவால் நிறைய ஊர்கள் சென்று ஆண்டாள் பற்றி பேச வாய்ப்பும் கிடைத்தது.

தங்களால் திரு.நம்பி நாராயணன்,  ரு.சுதர்சன்,Dr.MA.வேங்கடகிருஷ்ணன்,Dr.அனந்த பத்மநாபசாமி, திரு.குருஜி கோபாலவள்ளிதாஸர்,நடிகர் திரு.விசு என நிறைய நல்ல மனிதர்களின் அறிமுகமும் கிடைத்தது. இந்த கூட்டங்கள் மற்றும் நான் சந்தித்த புதுமுகங்களால் ஒரு விஷயம் ஊர்ஜிதமாக தெரிந்து கொள்ள முடிந்தது

அது 100000000 கோடி வைரமுத்துகள் வந்தாலும் என் மதத்தை ஆட்டவோ,அசைக்கவோ முடியாது. ஆரம்பமே இல்லாத இந்து மதத்திற்கு முடிவு எழுத வந்ததாக உங்களை சொல்லி கொள்ளும் திரு.வைரமுத்து அவர்களே… பகுத்தறிவாளன் என்று தலைசுமையோடு அலையும் திரு.வைரமுத்து அவர்களே

பிற மதத்தினவர்கள் சந்தோஷப்படுவார்கள் என நினைத்து இராமனின் பிறப்பை கொச்சைப்படுத்தி பேசிய திரு.வைரமுத்து அவர்களே

பிராமணர்களை இன்று பேசும் இடங்களில் எல்லாம் கேலி செய்யும் திரு.வைரமுத்து அவர்களே உங்களுக்கு இரண்டே இரண்டு கேள்விகள்

1.உங்களுக்கு ,முதன்முதலாக Language commission ல் வேலை கொடுத்த ஜஸ்டிஸ் திரு.மகராஜன் பிள்ளை ஆத்திகவாதியாயிற்றே. அவரின் காலில் விழுந்து வேலை வாங்குவதற்கு முன் உங்கள் கொள்கை எந்த கடை தெருவில் என்ன செய்து கொண்டிருந்தது?

2.பின் நான் ஒரு பெண்ணை காதலிக்கின்றேன் அவளுக்கு பிராமணனான திரு.R.வெங்கடராமனிடம் (முன்னாள் ஜனாதிபதி) சொல்லி எப்படியாவது ஒரு வேலை வாங்கி கொடுங்கள் என ஜஸ்டிஸ் திரு.மகராஜன் பிள்ளை அவர்களிடம் அழுது புரண்டு வேலை வாங்கியபோது உங்களுடைய பிராமணர்கள் கூறித்த கொள்கை முடிவு எங்கு ஊருக்கு சுற்றுலா சென்று இருந்தது?

திரு வைரமுத்துவின் அறியாமையை அவருக்கு உணர்த்திட ஏதுவாக மூன்று கட்டமாக திட்டம் தீட்டி உள்ளேன்.

முதல் கட்ட நடவடிக்கையாக…  உதவி தேவைப்படும் விவசாய குடிமக்களுக்கு ஜாதி,இனம்,மதம்,கோத்திரம்,மொழி கடந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டாள் கோ தான திட்டத்தின் கீழ் நாட்டு பசு கொடுக்க உள்ளோம்

பின் நாட்டு பசுவினால் கிடைக்கும் சாணம்,கோமியம் கொண்டு என்ன வகையான பொருட்கள் தயாரிக்கலாம் என்று பயிற்சியும் வழங்க உள்ளோம். கூடிய விரைவில் ஆண்டாள் கோவிலில் வைத்து 108 விவசாயிகளுக்கு நாட்டுபசுவும்,நாட்டு பசுவினால் கிடைக்கும் சாணம்,கோமியம் கொண்டு என்ன வகையான பொருட்கள் தயாரிக் கலாம் என்று பயிற்சியும் வழங்கப்படும்

நாட்டு பசு பெறுவதற்கு கீழ் கண்ட விதிமுறைகள் வரையறுக்கபட்டுள்ளது

1. ஆண்டாள் கோதான திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நாட்டு பசுவை எக்காரணம் கொண்டும் விற்க கூடாது
2. தினமும் 1 டம்ளர் எச்சில் படாத பாலை பக்கத்தில் உள்ள கோவிலுக்கு கொடுக்க வேண்டும்
3. நாட்டு பசு இறக்கும் பட்சத்தில் புதியதாக நாட்டு பசு பயனாளிக்கு கொடுக்கப்படும்

இரண்டாம் கட்ட நடவடிக்கையாக… ஒவ்வொரு ஊரிலும் நாட்டு பசு கோசாலை நிறுவப்படும்

மூன்றாம் கட்ட நடவடிக்கையாக, இதை படிக்கும் உண்மையான ஆண்டாள் பக்தர்களுக்கு ஓர் வேண்டுகோள்:

திரு.வைரமுத்து அவர்களுக்கு சாத்விகமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க ஆசைப்படுவோர்

1. வருகின்ற August 13,2018 காலை 7 மணிக்கு நடைபெற உள்ள ஆடி பூரத் தேரோட்ட விழாவில் பங்கேற்போம். தேரின் வடம் பிடிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் மண்ணை மிதிப்போம்.

இன்னொரு முறை யாரும் என் மதத்தை தொட கூட நினைக்க கூடாது.
மீறி தொட நினைப்பவன் தொலைந்து போகும் அளவிற்கு நாம் பெரும் திரளாக
ஆடியில் ஆண்டாள் அவதாரம் செய்த மண்ணில் கூடி நம்மை களங்கப் படுத்தியவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்துவோம்.

திரு.வைரமுத்து அவர்களே எழுதி வைத்து கொள்ளுங்கள்… என்னை வெறும் தூசி என்று நினைத்து வீட்டீர்கள் … நான் வெறும் தூசி தான் உங்கள் கண் பார்வையில் இந்த தூசி உங்கள் கண்ணில் விழும் போது நீங்கள் எழுந்திருக்கவே முடியாது உங்கள் நிலையில் இருந்து  இது சத்தியம். நான் சொல்வது  நடக்கப் போவது  சர்வ நிச்சயம்!

தூங்கிய என்னை தட்டி எழுப்பி  பயணப்பட வைத்த ஆண்டாளுக்கு நன்றி

என்றும் அன்புடன்

ஆண்டாள் P சொக்கலிங்கம்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.