இலக்கியம் காலமானார் ’பாரதி சுராஜ்!’

காலமானார் ’பாரதி சுராஜ்!’

-

- Advertisment -

சினிமா:

திரையுலகினர் அதிர்ச்சி! இளம் நடிகர் மரணம்! கொரோனா?

ஒரு நடிகர் மரணமடைந்திருப்பது திரையுலகை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

மோகன்லால் குறித்து தீயாய் பரவிய வதந்தி! வன்மையாக கண்டித்த முதல்வர்!

ஊடகங்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் பிரபல நடிகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்ததாக வதந்தி பரப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்....

ரகசிய உறவில் உள்ளதை பகீரென போட்டுடைத்த பிந்துமாதவி!

அனைவரும் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட ஊடரங்கினால் மக்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள்...

ஒருவர் ஆடையை ஒருவர் மாற்றி மாற்றி போட்டு நடனம்! பிரபல நடிகை கணவருடன்.. வைரல் வீடியோ!

ஊரடங்கு காலத்தில் பிரபல நடிகையும், அவரது கணவரும் பிலிப் சேலஞ்சுக்காக வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது....
-Advertisement-

மதரீதியாக அணுகக் கூடாதுதான்! ஆனால் சட்டமீறல்களுக்கு தண்டனை என்ன?!

மதரீதியாக நாம் இதை பார்க்கவில்லை, ஆனால் பாஜகவை தவிர மற்ற கட்சிகள் தான் இதை மத ரீதியாக அணுகுகின்றன என்பதை அனைத்து கட்சிகளிலும் உள்ள தொண்டர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

டார்ச் லைட் அல்லது விளக்கு ஒளிர விட்டால் கோரோனா வைரஸ் போய்டுமா?

டார்ச் லைட் அல்லது விளக்கு ஒளிரவிட்டால் கோரோனா வைரஸ் போய்டுமா ???? தேச விரோதிகள் இப்போது கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளளனர். விவரம் புரியாமல் அதை சிலர் Forward செய்கின்றனர்.

ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்: அகலில் அகலும் அணுகில் அணுகும்!

ராமாயணத்திலே விபீஷணன் சரணாகதியை வர்ணிக்கும் போது, 'விபீஷணன் ராமனிருக்கும் இடம் சென்றான்' என்று சொல்லப்படவில்லை. 'ராமனிருக்கும் இடம் வந்தான்' என்றுதான் சொல்லி இருக்கிறது.

ஊடகங்களின் ‘உயிர் அச்ச ஃபோபியா…!’

அனைத்து மாநில அரசுகளும் இந்த தயக்கத்தை கைவிட்டு இதயமற்ற குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்று காஸியாபாத்… இன்று கான்பூர்! ஜமாத்துகள் திருந்தவே மாட்டார்களா?

எங்கு பார்த்தாலும் அங்கு துப்பி மருத்துவ நிபந்தனைகளை மீறி கொச்சை வார்த்தைகளைப் பேசி அநாகரிகமாக நடந்து கொள்கிறார் என்று மருத்துவக் கல்லூரி முதல்வர், டீன் டாக்டர் ஆரதிதேவி லால் சந்தானி குற்றம் சாட்டியுள்ளார்.

தொழுகையை தடுக்கச் சென்ற போலீஸ் மீது சரமாரி கல்வீச்சு! ஹுப்ளியில் முஸ்லிம்கள் அராஜகம்!

முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்து போலீசார் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினார்கள். இந்த கும்பல் வன்முறைச் சம்பவத்தில் போலீசார் பலர் காயம் அடைந்தார்கள்.

ஐயோ பாவம்… மகளின் இறுதிச் சடங்கை வீடியோ அழைப்பில் பார்த்து கதறிய தந்தை!

தினமும் வீடியோகால் மூலம் தன் மகளுடன் பேசிவரும் அந்த தந்தை அதே வீடியோ கால் மூலம் அவளுடைய இறுதிச் சடங்கையும் பார்த்து அழுது கதறினார்.

போலீஸாரை தாக்கும் முஸ்லிம்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!

அரசு சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலை புறந்தள்ளி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்ட வேண்டும் - என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது!

கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க… தனியார் மருத்துவமனைகள் பட்டியல்: தமிழக அரசு அனுமதி!

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ள தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அடங்கிய பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தப்ளிக்-இ-ஜமாத் நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலம்… கொரோனா பரவி… மளிகைக்கடை நடத்திய பெண்மணி மரணம்!

வெளியிடங்களில் பயணக்கவில்லை என்றும், தொற்றுநோயால் பாதிக்கப் பட்டதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவர் தனது கிராமத்தில் ஒரு மளிகைக் கடையை நடத்தி வந்தார்.

ஹைதராபாத் மௌலாஅலி பகுதியில் கொடூரம்; போலீஸாரை தாக்கிய முஸ்லிம் பெண்!

சக போலீஸ்காரர்கள் உடன் இருக்க, இவ்வாறு காவல் அதிகாரியின் சட்டையைப் பிடித்து ஒரு பெண்மணி கண்டபடி திட்டுவது குறித்த வீடியோ காட்சி தற்போது சமூகத் தளங்களில் வைரலாகி, கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது.

அடப்பாவமே… இப்படியா ஆவணும்?! மது கிடைக்காம… இதை செஞ்சு… உசுர விட்டானுங்களே!

இந்நிலையில் வீடுகளில் இருக்கும் மக்கள் சிலருக்கு, வழக்கம் போல் மது அருந்தி பழக்கப்பட்டு விட்டதால், மது கிடைக்காமல் அல்லது குடிக்காமல் இருப்பது பெரும் உளவியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும்?: உலக சுகாதார அமைப்பு விளக்கம்!

இந்த வைரஸ் வெறுமனே காற்று மூலமே பரவும் என செய்திகள் வெளியாகி, இதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 20வது நாளாக...
- Advertisement -
- Advertisement -

பாரதி சுராஜ் (வயது 92) இன்று காலை காலமானார். இயற்பெயர் செளந்தரராஜன். சுராஜ் என்று சுருக்கியவர் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு.

தொடக்க காலத்தில் நிறையச் சிறுகதைகளை எழுதினார். சுதேசமித்திரன், தினமணிகதிர், குமுதம், வெள்ளிமணி போன்ற பத்திரிகைகளில் இவரது பல சிறுகதைகள் வெளியாகியுள்ளன. சிவாஜி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர்.

எழுத்தாளர்களைப் பற்றிய நகைச்சுவைத் தொடர் ஒன்றையும் சிவாஜி பத்திரிகையில் எழுதினார். `மிஸ்டர் முடியாக் கதை, மிஸ்டர் புரியாதது, மிஸ்டர் மொழிபெயர்ப்பு, மிஸ்டர் தழுவல்` என மிஸ்டர் சுராஜ் எழுதிய தொடர்கள் புகழ்பெற்றவை. `காலச்சக்கரம்` இதழில் இவர் எழுதிய சிறுகதைகள் குறிப்பிடத் தக்கவை.

காலச் சக்கரம் உருண்டு ஓடியது. பின்னாளில் சிறுகதைகள் எழுதுவதை முற்றிலுமாகக் கைவிட்டார். பாரதி இலக்கியக் கட்டுரையாளர் ஆனார். தினமணி, திருமால், ஆலய தரிசனம், சப்தகிரி, கடவுள், காமகோடி எனப் பற்பல பத்திரிகைகள் இவரது கட்டுரைகளைத் தொடர்ந்து பிரசுரித்தன.

தினமணிசுடரில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல் மதிப்புரைகள் எழுதியவர். `இவ்வளவு அழகாக மதிப்புரை எழுதுகிறீர்களே, மதிப்புரை எழுதுவது எப்படி?` என இவரைக் கேட்டார் எழுத்தாளர் மகரம். அதற்கு `மதிப்புரை எழுதுவது இப்படித்தான்!` என இவர் ஒரு பதில் எழுதினார். அந்த பதில் மகரம் தொகுத்த `எழுதுவது எப்படி?` என்ற புத்தகத் தொகுப்பில் ஒரு கட்டுரையாக இடம் பெற்றுவிட்டது.

வசதியற்ற பெரிய குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் கட்டணச் சலுகை பெற்றுத்தான ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் படித்தார். லயோலா கல்லூரியில் இன்ட்டர்மீடியட் படித்தபோது ஜெரோம் டிசெளசாவின் அன்பையும் உதவியையும் பெற்றார். வசதிக் குறைவால் ஸ்ரீசென்ன மல்லீஸ்வரர் கேசவப் பெருமாள் இலவச விடுதியில் தங்கிப் படித்தார். உடன் இருந்தவர் பின்னாளில் புகழ்பெற்ற பேராசிரியராக விளங்கிய ந. சஞ்சீவி.

லயோலா கல்லூரித் தமிழ்ச் சங்கத்தில் இவர்தான் துணைச் செயலர். அதே நேரத்தில் தமிழ்ச் சங்கச் செயலராக இருந்தவர் குமுதம் எஸ்.ஏ.பி. அண்ணாமலை. திரைவானில் மங்காத ஒளிவீசிக் கொண்டிருந்த நடிகர் டி.ஆர். மகாலிங்கம் இவரது நெருங்கிய நண்பர்.

பதிவுத் துறையில் சேர்ந்து 40 ஆண்டுகள் பணிபுரிந்து 1986இல் முதல் நிலை சார் பதிவாளராக ஓய்வு பெற்றார். பள்ளிப் பருவத்தில் அமரர் கல்கியிடம் பாரதி கவிதை நூல் பரிசு வாங்கியதிலிருந்து பாரதி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டார். 1951இல் சென்னை சைதாப்பேட்டையில் பாரதி கலைக் கழகத்தைத் தொடங்கினார். தொடக்கவிழாவில் பரலி சு. நெல்லையப்பர், நாரண துரைக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெ. சாமிநாத சர்மா, கி.வா.ஜ., அ.சீனிவாசராகவன், செளந்தரா கைலாசம், அவ்வை நடராசன், ஆரா. இந்திரா, எஸ். நல்லபெருமாள் போன்ற பலர் இவ்வமைப்பில் பேசியுள்ளார்கள்.

சிலம்புச் செல்வரிடம் இளமையிலிருந்து மட்டற்ற ஈடுபாடு கொண்டவர். `வெளியிலிருந்து என்னைக் கண்காணிப்பவர்` என்று ம.பொ.சி. இவரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். கி.வா.ஜ. இவரைச் சந்திக்கும்போது ஆழ்வார் பாசுரம் சொல்லச் சொல்லிக் கண்ணீர் வடிப்பார்.

தீபம் நா.பா.விடம் இவருக்கு அன்பு மிக அதிகம். (இறப்பதற்கு முதல்நாள், பாரதி கலைக்கழக விழாவுக்குச் செல்ல வேண்டும் என நா.பா கூறியதை எண்ணி இவர் அடிக்கடி நெகிழ்ந்ததுண்டு.) நா.பா. நடத்திவந்த `திண்ணை` என்ற இலக்கிய அமைப்புக் கூட்டங்களுக்கு எழுத்தாளர் சுப்ரபாலனோடு இவர் தவறாமல் வருகை தந்ததுண்டு.

சென்னை கம்பன் கழகத்தில் எம்.எஸ். சதாசிவம் நிறுவியுள்ள கம்பன் அடிப்பொடி விருதைப் பெற்றவர். பாரதி இளைஞர் சங்கம் இவருக்கு `பாரதி பைந்தமிழ்ச் செல்வர்` பட்டம் வழங்கியது. சென்னை வானவில் பண்பாட்டு மையம் வழங்கும் பாரதி விருதை முதலில் பெற்றவர் இவர்தான்.

பாரதியைக் கடவுள் நிலையிலேயே வைத்து வழிபடும் இவர், சென்னை மத்திய கைலாஸ் ஆலயத்தில் பாரதி ஆழ்வராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டதில் முழு உடன்பாடு உடையவர்.

இவரின் மறைவு பாரதி அன்பர்களிடம் அளவற்ற துயரத்தைத் தோற்றுவித்துள்ளது.

முகவரி: 2. இருபத்தி ஏழாவது தெரு, நங்கநல்லூர், சென்னை- 600 061. அர்த்தநாரீஸ்வரர் கோயில் அருகில்…

புதல்வர் திரு ராமசாமி தொலைபேசி எண்: 94453 56769

– திருப்பூர் கிருஷ்ணன் (எழுத்தாளர் / பத்திரிகையாளர்)

- Advertisement -

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

-Advertisement-

Follow Dhinasari :

17,974FansLike
235FollowersFollow
804FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய உணவு: சாக்லேட் வேர்கடலை!

கலவை நன்கு கெட்டியாகி வரும்போது வேர்க்கடலையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பின் பரிமாறவும்.

பாதாம் ஆனியன் ஃப்ரை!

எண்ணெயைக் காயவிட்டு, பிசிறிய கலவையைக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாகப் பொரித் தெடுக்கவும்.

வெண்டைக்காய் தயிர் பச்சடி!

2 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |