உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி சோ ஆக முடியாது!

என்ன ...??? சோ-வின் வாசகர்கள் பாடுதான் கஷ்டம். ஆனால் வேறு வழியில்லை. சோ-வே போன பிறகு துக்ளக் மாத்திரம் எப்படி இருக்க முடியும்..??? உயர உயரப் பறந்தாலும் குருமூர்த்தி என்னும் ஊர்க்குருவி சோ எனும் பருந்து ஆகாது.

அனுகூல சத்துருக்கள் கையில் நம் நாட்டு#பத்திரிக்கைகள்! இப்போது துக்ளக்கும். ஒரு காலத்தில் பத்திரிகைகளுக்கென்று ஒரு மரியாதை இருந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, தி ஹிந்து போன்ற பத்திரிக்கைகளுக்கென்று கௌரவம் இருந்தது.

1990களில் கூட நம் நாட்டில் பத்திரிக்கை தர்மம் ஓரளவிற்கு இருந்தது. ஆனந்த விகடன் ஒரு ஜனரஞ்சகமான பத்திரிக்கையாகவே இருந்தது. கல்கி தன் பெருமை குறையாமல் வெளிவந்து கொண்டிருந்தது. துக்ளக் வாசகன் என்பதே ஒரு கௌரவமான விஷயம்.

சர்க்குலேஷன் குறைவால் #குமுதம்தள்ளாடத் துவங்கிய அதே நேரத்தில் சமுதாயத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தங்களால் தீர்வு காண முடியுமென்ற நம்பிக்கையை மக்கள் மனதில் உருவாக்கி Investigation Journalism எனும் conceptஐ ஜூனியர் விகடன் உருவாக்கியது.

1990களில் ஜூனியர் விகடனால் பத்திரிகை துறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படவே புற்றீசல் போல புது புது பத்திரிகைகள் வரத்துவங்கின. குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் போன்ற குறைப்பிரசவங்களையும் தமிழகம் கண்டது.

இதற்கிடையில் ஆனந்த விகடன் குழுமமே மெல்ல மெல்ல கைநழுவி கம்யூனிஸ்டுகளின் பிடியில் சென்று விட்டது. ஆனந்த விகடனின் தரம் குறையக் குறைய அதன் வடிவம் மெருகேறி ரூ.3/-க்கு விற்ற புத்தகத்தின் விலையோ தாறுமாறாக உயர்ந்தது.

அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்திழுக்க (அதாவது முட்டாள்களாக்க) பக்தி, பெண்ணியம், விவசாயம், பங்குச்சந்தை என ஒட்டுமொத்த ஹிந்துக்களின் பணத்தையும் பலவழிகளில் சூறையாடத் துவங்கியது விகடன்.

அதே சமயம் முழுக்க முழுக்க ஹிந்து விரோத, நக்சல் பிரச்சார பீரங்கி ஆனது விகடன். இந்த சமயத்தில்தான் தமிழகம் முழுவதிலும் உள்ள ஜனரஞ்சக, நேர்மையான பத்திரிக்கைகளில் ஊடுருவி அவற்றை மெல்ல மெல்ல ஸ்வாஹா செய்தன கம்யூனிஸ்டு அமைப்புகள்.

ஆனாலும் #பரத்தையர்_வாழும்_தெருவில்_பத்தினியாக மிளிர்ந்த துக்ளக் – திரு. சோ அவர்களின் மறைவிற்குப் பிறகு ஆடிட்டர் குருமூர்த்தியின் புண்ணியத்தில் ஊரோடு ஒத்துப் போ என்பது போல பத்திரிகைத் தெருவில் ஐக்கியமாகிவிட்டதன் அறிகுறிதான் இதுபோன்ற குப்பைகள்.

இதற்கு பேசாமல் ஆடிட்டர் திரு. குருமூர்த்தி துக்ளக்கை இழுத்து மூடிவிட்டுப் போகலாம். அவருக்கு வருமானத்துக்குக் குறைவு எதுவும் இல்லை. ஆயிரம் வழிகளில் வருமானம் உண்டு. துக்ளக்கை வைத்துத்தான் பிழைக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை.

என்ன …??? சோ-வின் வாசகர்கள் பாடுதான் கஷ்டம். ஆனால் வேறு வழியில்லை. சோ-வே போன பிறகு துக்ளக் மாத்திரம் எப்படி இருக்க முடியும்..??? உயர உயரப் பறந்தாலும் குருமூர்த்தி என்னும் ஊர்க்குருவி சோ எனும் பருந்து ஆகாது.

இரண்டு வருடங்கள் கூட ஆகவில்லை. அதற்குள்ளேயே சோ வின் இடத்தை தன்னால் நிரப்ப முடியாது என்பதை மீண்டும் நிரூபித்த ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களுக்கு நன்றி..!

– கே.வி.சிவராமன் ஐயர் (K V Sivaraman Iyer)

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...