ஏப்ரல் 10, 2021, 5:24 மணி சனிக்கிழமை
More

  எண்ணங்களே எழுத்துகளாக… நூல் வெளியீடு!

  நாக்பூரை சேர்ந்த ஜெயஸ்ரீ சாரி எழுதிய புத்தகம் 'எண்ணங்களே எழுத்துகளாக' ! இது சமீபத்தில்

  IMG 20210309 WA0035 - 1

  நாக்பூரை சேர்ந்த ஜெயஸ்ரீ சாரி எழுதிய புத்தகம் ‘எண்ணங்களே எழுத்துகளாக’ ! இது சமீபத்தில் நிறைவடைந்த 44-வது சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.

  இளம்பரிதி, (உரிமையாளர், பரிதி பதிப்பகம்), முன்னிலையில் .ராசி அழகப்பன், (திரைப்பட இயக்குனர்), புத்தகத்தை வெளியிட உதயம் ராம் (ஆசிரியர், நம் உரத்த சிந்தனை), முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். ஓவியர் மணி , கவிஞர் வேணு குணசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
  “ஒரு எழுத்தாளருக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைப்பதென்பது ஒரு பொக்கிஷம்,” என்றார் ராசி அழகப்பன்.

  IMG 20210311 WA0033 - 2

  உதயம்ராமும் ஜெயஸ்ரீ சாரிக்கு வாழ்த்து தெரிவித்தார். ஜெயஸ்ரீ சாரி கூறும்போது,
  “என் குடும்பத்தின் மூன்று தலைமுறையுடன் என் ‘எண்ணங்களே எழுத்துகளாக’ புத்தகத்தை புகழ்பெற்ற சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிட வேண்டும், என்ற எண்ணமானது நிறைவேறிய தருணம் என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்றார்.

  என். திருமலை, கண்காணிப்பாளர் ( ஓய்வு) , இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தி. லெக்ஷ்மி நரசிம்மன், மண்டல மேலாளர், நில்கமல் லிமிடெட், சென்னை, தி. விஜயலெக்ஷ்மி, தீபா நரசிம்மன், லெ. நித்யஸ்ரீ, அபிஷேக் சாரி, அர்ஜுன் சாரி மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  2 + five =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  432FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,104FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »