September 19, 2021, 10:57 pm
More

  ARTICLE - SECTIONS

  ‘நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம்’ – புத்தக வெளியீடு!

  நூறாண்டுகளை கடந்த கேரளத்தின் தற்போதைய மலப்புரத்தில் அரங்கேறிய மாப்ளா கலவரம் குறித்து தமிழில் சரித்திர ஆதாரங்களுடன்

  mapla violence - 1

  டி.எஸ். வேங்கடேசன்

  வரலாற்றில் 6 கோடிக்கும் அதிகமான ஹிந்துகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நூறாண்டுகளை கடந்த கேரளத்தின் தற்போதைய மலப்புரத்தில் அரங்கேறிய மாப்ளா கலவரம் குறித்து தமிழில் சரித்திர ஆதாரங்களுடன் புத்தகம் “நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம் “ வெளிவந்துள்ளது.

  விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில பாரத இணை பொதுச் செயலாளர் கோ ஸ்தாணுமாலயன் எழுதிய ‘நூறாண்டு காணும் மாப்ள் கலவரம்’ புத்தகம், ஜூலை 13 அன்று, சென்னை மீனாட்சி கல்லூரி வளாக அரங்கில் வெளியிடப்பட்டது.

  நூலாசிரியர் தமது உரையில், மாப்ளா கலவரம் குறித்த உண்மையான தகவல்கள் தரப்படவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லீம்கள் உண்மையை மறைத்து அதை சுதந்திரப் போராட்டத்துக்கான முன்னோடியாகக் கூறி வருகின்றனர். இதில் சிறிதும் உண்மையில்லை.

  பாரதத்தில் அரங்கேறும் போராட்டங்களுக்கு வெளிநாட்டு சதி, பின்னணி, காரண காரியங்கள் இருக்கக் கூடும். இது ஆங்கிலேயர்களுக்கு எதிரானது இல்லை. விடுதலைப் போராட்டத்துக்கான முன்னெடுப்பும் இல்லை. புத்தகத்தின் இறுதியில் “பாரதத்தின் பாரம்பரியத்தின் மேல் பற்றுக் கொண்ட அனைவரும் இதன் கோரத்தை ( மாப்ளா கலவரம்) உணரவில்லையெனில், மீண்டும் ஒரு கொடுமையான படிப்பினையை கற்றுத்தரத் தயாராக உள்ளது. படிப்பினைகளை கற்பதே நமது வரலாறாகி விடக் கூடாது என்பதே இப்புத்தகத்தின் நோக்கம்” என எழுதியுள்ளதை சுட்டிக் காட்டினார்.

  “இங்கு வாழும் பிற மதத்தினரின் மனதில் தங்கள் முன்னோர் ஹிந்துகளே என்ற எண்ணங்களை முதலில் ஆழப் பதிக்கச் செய்ய வேண்டும். அதே சமயம், சொந்த சமுதாயத்தையும் வலுப்படுத்த வேண்டும். வலிமை இல்லாதவர்கள், அபலைகள் , அவர்கள் தாக்குதலுக்கு உட்பட்டதே வரலாறு சொல்லும் செய்தி. மீண்டும் மாப்ளா கலவரங்கள் நிகழ அநுமதிக்கக் கூடாது. இந்த எண்ணமே கயவர்களின் சிந்தையில் தோன்றா வண்ணம் ஹிந்து சமுதாயம் பலம் பெறுவதும் காலத்தின் கட்டாயமாகும். எல்லாக் கலவரங்களும் இத்தோடு முற்றுப் பெறட்டும்”என புத்தகத்தின் கடைசி செய்தியாக கூறியுள்ளதாக ஸ்தாணுமாலயன் கூறினார்.

  இந்தப் புத்தகத்தை இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தேசபக்தர்களுக்கு சமர்பணம் செய்வதாக நூலாசிரியர் தெரிவித்தார்.

  நூலின் முதல் பிரதியை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஐ வி மணிவண்ணன், மீனாட்சி சுந்தர்ராஜன் பொறியியல் கல்லூரியின் செயலாளர் டாக்டர் கே எஸ் பபாய், கேஇஎச் குழுமத்தின் மேலாண் இயக்குநர் வசந்த் குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

  mapla violence book horz - 2

  முன்னாள் உயர் கல்வித்துறை சிறப்புச் செயலாளர் மணிவண்ணன் பேசுகையில், பொதுவாக துயர நிகழ்ச்சிகளின் 100வது ஆண்டை கொண்டாடுவதில்லை. நினைவு கூர்வதில்லை. ஆனால், மாப்ளா கலவரத்தின் உண்மைநிலை மக்களுக்கு தெரிவிக்கப்படாமல் அவரவர் கருத்து, கொள்கைகளுக்கு ஏற்ப திரித்து கூறப்பட்டு வருகிறது.

  மாப்ளா கலவரம் விவசாயிகளின் போராட்டம் எனவும், சுதந்திரப் போராட்டத்துக்கு முதல் விதை எனவும் கூறிவருகின்றனர். ஓட்டோவன் அரசுக்கு எதிராக முஸ்லீம்கள் நடத்திய போராட்டத்துக்காக கேரளத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் கேரளத்தின் மலபார் பகுதியில் ஆதரவாக நடத்தப்பட்டதே இது.

  திப்பு சுல்தான், அவரது தந்தை ஹைதர் அலி காலத்தில் மதம் மாற மறுத்த ஹிந்துகளைக் கொன்றனர்.பெண்கள் அவர்கள் கணவர், சகோதர்கள் கொடூரமாக வண்புணர்வு செய்யப்பட்டனர். அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு இஸ்லாமியர்களுக்கு தாரை வார்க்கப்பட்டது. பிறகு வந்த ஆங்கிலேயர்கள் இதை மீண்டும் ஹிந்துகளுக்கு மீட்டு தந்தனர். இதற்கு முஸ்லீம்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதைத்தான் முஸ்லீம்களும், கம்யூனிஸ்ட்டுகளும் விவசாயப் போராட்டம் என்கின்றனர்.

  மாப்ளா கலவரத்தின் போது ஹிந்துகள் தான் குறிவைத்து தாக்கப்பட்டனர். விரல் விட்டு எண்ணும் அளவில்தான் ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். எனவே இது ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டம் எனக் கூற முடியாது. இதுபோன்ற கொடூர துயர சம்பவங்கள் வேறு எங்கும் நடக்கவில்லை.

  நூலாசிரியர் உண்மைத் தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ளார். அடுத்தது என்ன என்ற ஆவலை தூண்டும் வகையில் சம்பவங்களைக் கொடுத்துள்ளார். படிப்பதற்குஎளிதாக பெரிய எழுத்துகளில் அழகுற வடிவமைத்துள்ளார். இந்த புத்தகம் மலப்புரம் மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமியர்கள் மற்றும் அவர்களின் தீவிர மதமாற்ற அநீதிகளை சரியான முறையில் விளக்குகிறது. அனைத்து தரப்பினருக்கும் சம்பவத்தின் உண்மை நிலையை தெளிவாக நடுநிலையுடன் உள்ளது உள்ளவாறு எடுத்துக் காட்டியுள்ளார்” என தெரிவித்தார்.

  விஜயபாரதம் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ.100/-

  1 COMMENT

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,430FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-