Home உள்ளூர் செய்திகள் திருச்சி சின்ன அண்ணாமலை நூற்றாண்டு சிறப்பிதழ்! வெளியிட்டது கருவூர் திருக்குறள் பேரவை!

சின்ன அண்ணாமலை நூற்றாண்டு சிறப்பிதழ்! வெளியிட்டது கருவூர் திருக்குறள் பேரவை!

chinna annamalai function karur
chinna annamalai function karur

கருவூர் திருக்குறள் பேரவை சார்பில் நேற்று மாலை ஆரியாஸ் கூட்ட அரங்கில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திருக்குறள் பேரவைத் தலைவர் ப.தங்கராசு தலைமை தாங்கினார்.

செயலாளர் மேலை பழநியப்பன் தேசியச் செல்வர் சின்ன அண்ணாமலையின் சிறப்புக்களை எடுத்துக் கூறினார். உலக வரலாற்றிலேயே சுதந்திர போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரை பகல் 12 மணிக்கு இருபது ஆயிரம் மக்கள் கூடி திருவாடானையில் சிறைப்பூட்டை உடைத்து வெளிக் கொணர்ந்த வரலாறு சின்ன அண்ணாமலைக்கு மட்டுமே உண்டு என்றார்

சின்ன அண்ணாமலை நூற்றாண்டு சிறப்பிதழை ப.தங்கராசு வெளியிட கருவூர் பகுதி கவிஞர்கள் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து இலக்கியங்கள் என்ன தரும்? என்ற தலைப்பில் உரையாற்றிய குளித்தலை தமிழ்ப் பேரவைத் தலைவர் முனைவர் கடவூர் மணிமாறன், இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி, கடந்த காலத்தை கண்முன் காட்டுபவை. நிகழ்காலத்தை நெறிப்படுத்துபவை’தொலைநோக்கு சிந்தனையை வளர்ப்பவை. கதை, கவிதை கட்டுரைகளாய் எப்படி வாழ வேண்டும் என்பதையும், உண்மை உழைப்பு, மானம், மதிப்பு அன்பு, கொடை இவற்றால் வையத்துள் வாழ்வாங்கு வாழ வழி காட்டுபவை இலக்கியங்கள் என்றார்

நிகழ்வில் ருத்ரா, பேராசிரியை இளவரசி பொன்னி சண்முகம், கார்த்திகேயன், க.ப.பாலசுப்ரமணியன், நீல வர்ணன், பரமத்தி சரவணன், குளித்தலை முகன், ப.குமாரசாமி, தென் னிலை கோவிந்தன், செகன்நாதன், ரோட்டரி பாஸ்கர், ரமணன், அழகரசன் உட்பட பலர் பங்கேற்றனர். முகக் கவசம், நுன் கிருமி அகற்றும் திரவம் வழங்கப்பட்டு நடைபெற்றது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version