19/10/2019 8:33 PM
இலக்கியம் உங்களோடு ஒரு வார்த்தை பாதிரிகளால் நல்லவனான ஆஷ் துரையும் தமிழர் பெயரால் கெட்டவனான வாஞ்சியும்!

பாதிரிகளால் நல்லவனான ஆஷ் துரையும் தமிழர் பெயரால் கெட்டவனான வாஞ்சியும்!

-

- Advertisment -
- Advertisement -

ஜூன் மாதம் இன்று 7ம் தேதி … இதோ வருகிறது 17 ஆம் தேதி.

வழக்கம்போல், கிறிஸ்துவ மிஷனரிகளின் உதவி பெற்ற நாய்கள் வாலாட்டத் துவங்கிவிடும். அவர்களில் சில தமிழர், ஆதி தமிழர் பெயர் போட்டுக்கொள்ளும் லெட்டர் பேட் இயக்கங்களும் ஆஷ் துரை சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தி, அப்படியே கொஞ்சம் கவர் கொடுத்து, பிரதான ஊடகங்களில் கவர் செய்யப்படும் வாய்ப்பைப் பெற்று விடும்!

ஆனால்…
தேச பக்தர்களோ தாங்கள் சமூக விரோத கும்பல்களின் டேஷ் பக்தாஸ் என்ற கிண்டல்களையும் கேலிகளையும் தாங்கிக் கொண்டு, நாயினும் கடையேனாவேன் என்று தங்களைத் தாழ்த்தி வழக்கம் போல் தங்கள் தங்கள் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். உயிரைத் துச்சமென மதித்து, தங்கள் உடல் சுகம், வாழ்வின் சுவை எல்லாவற்றையும் துறந்து, அடியும் வலியும் நிறைந்ததாய் வாழ்ந்து முடிவு கண்ட வாஞ்சி போன்ற தியாகத் திருவுள்ளங்களுக்கு, கல்லடியும் சொல்லடியும் பட்டு கரைந்து போகும் நிலையிலும் தேச பக்தர்கள், தங்கள் மனமார்ந்த அஞ்சலியை செலுத்தி மனநிறைவு எய்துவார்கள்!

அவரவர் மனப்பாங்குக்கு ஒப்ப அவர்களின் செயல்கள் அமையும்!

வாஞ்சி என்றதும், நட்பு வட்டத்தில் இருந்து என்னிடம் தனிப்பட்ட வகையில் ஒரு செய்தியை அனுப்பி, இது எப்படி பரவுகிறது பாருங்கள் என்று கேட்பார்கள்…

அதாவது, ஆஷ் துரை, அருந்ததியர் இனத்தை சமமாக மதித்தவன் என்றும், தாழ்த்தப் பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருத்தியை அக்ரஹாரத்தின் வழியே கொண்டு செல்ல இருந்த தடையை உடைத்து ஆஷ் கொண்டு சென்றான் என்றும், அதனால் ஜாதி வெறியில் கோபப்பட்டு ஆஷ்துரையை வாஞ்சி சுட்டுக் கொன்றான் என்றும் கிறிஸ்துவ பாதிரிகளின் தூண்டுதலில் கதைகளைப் பரப்பி வைத்திருக்கிறார்கள். இந்தக் கதை எப்படிப்பட்ட புனைகதை என்பதை நான் முன்பேயே குறித்திருக்கிறேன்…

அதை இங்கே காண்க…

https://www.dhinasari.com/news/7410-சாதி-வெறியாளர்-யார்-2.html

அதாவது மறைக்கப்பட்ட உண்மைகள் என்று அதற்கு தலைப்பிட்டு கதை புனைந்திருக்கிறார்கள். அப்படி என்றாலே அது கட்டுக் கதை என்பது நன்றாக வெளித்தெரிகிறதே!

அடுத்து இவர்களின் புனைகதையில், ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் தென்காசி, செங்கோட்டையைச் சார்ந்த வெள்ளாளர்கள் அதாவது பிள்ளைமார்கள், பார்ப்பனர்கள் ஆகிய உயர்சாதியினர் மட்டும்தானாம்!
//வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் பார்ப்பனர்கள், வெள்ளாளர்கள் (பிள்ளைமார்கள்) மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருமே ஆஷ் துரை தீண்டாமைக்கு எதிராக செயல்பட்ட தென்காசி, செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தக் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஹரிஹரன், வேம்பு, மகாதேவர், பிச்சுமணி என்ற வெங்கடாசலம், தரும ராசன், வெங்கடேசுவரன் ஆகிய அனைவரும் பார்ப்பனர்கள். குற்றம் சாட்டப்பட்ட டி.என்.சிதம்பரம், முத்துக்குமாரசாமி, சாவடி அருணாச்சலம், அழகப்பன் ஆகியோர் தென்காசி, செங்கோட்டையைச் சேர்ந்த வெள்ளாளர்கள். இதுவே ஆஷ் துரையின் மீதான வெறுப்புக்கு காரணம் சாதி வெறிதான் என்பதை தெள்ள தெளிவாக புரிந்து கொள்ளளாம்…//

என்று எழுதிச் செல்கிறார்கள். பரப்புகிறார்கள்.

இதுவே உண்மை என்று கொண்டால், 1900களில் நெல்லை ஜில்லாவை மையமாகக் கொண்டு தென் தமிழகத்தில் தோன்றிய புரட்சிகர தேச விடுதலை இயக்கம்… பாரத மாதா சங்கம்… முழுக்கவும் உயர்சாதியினர் என்று ஆகிவிடும். அப்படி என்றால், அவர்களின் முக்கிய நோக்கம், பாளையங்கோட்டையில் மதமாற்றத்தில் ஈடுபட்டிருந்த பாதிரிகளின் மனிதநேயமற்ற அடாவடிச் செயல்களுக்கும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் பெரும் தடைக்கல்லாக அமைந்திருத்தல் என்பதுதான்!

அதனால்தானே, பாதிரிகள், ஆங்கிலேய அதிகாரிகளுடன் இணைந்து இவர்களின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள்! விடுதலை போராளிகள் மீது, புனைகதைகளை வரன்முறையின்றிக் கட்டவிழ்த்து விட்டார்கள்!

இவர்களின் கூற்றுப்படி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து போராடியது எல்லாம் உயர்சாதியினரான பிள்ளைமார்களும், பார்ப்பனர்களும் மட்டுமே என்றாகிவிடுமே! இப்படி ஒரு சாரார் மட்டும் கஷ்டங்களை அனுபவித்து, சுதந்திரம் வந்ததென்னவோ எல்லாருக்கும்தானே! இப்படி தங்களுக்கே சுதந்திரம் கிடைக்கக் காரணமாக இருந்த போராளிகளை, சாதியின் பெயரால் வசைபாடுவதுதான் நியாயமான செயலா? இதற்காக ஒரு வெறி பிடித்த ஆங்கிலேயனை தேவதூதன் போன்று நியாயவான் ஆக்கி, அவனது சமாதியைத் தொழுதுவிட்டு வருபவர்களை என்னவென்று சொல்வது?

ஆனால், இதே உயர் சாதியினரின் தர்ம நெறி எப்படி இருந்தது தெரியுமா?

அதை பாரதியின் வாக்கில் இருந்து பார்க்கலாம்.

வாஞ்சிநாதன், மணியாச்சி ரயில் நிலையத்தில், ஆஷ் துரை தூத்துக்குடியில் இருந்து வந்த மெயிலில் இருந்து இறங்கி, கொடைக்கானல் செல்லும் ரயிலுக்கு மாறி பயணம் செய்கிறான். அவன் விடுப்பில், தனது மனைவியுடன் சேர்ந்து பயணிக்கிறான். அந்த நேரத்தில் வாஞ்சி, ஆஷைச் சுட்டு விடுகிறான். இது எல்லோருக்கும் தெரிந்த நிகழ்வுதான்!

இதன் பின்னர் இந்தச் சம்பவத்தைக் குறித்து கருத்துப் பதிவு செய்த மகாகவி பாரதியார், தன் தர்மச் சிந்தையை எப்படி வெளிப்படுத்தினார் தெரியுமா?
வ.உ.சிதம்பரம் பிள்ளையை சிறையில் தள்ளி, செக்கிழுக்க வைத்து, அவரை அடித்துத் துன்புறுத்தி உடலை நார் நாராகக் கிழித்து, சுதேசி கப்பல் கம்பெனியை நசுக்கி, ஒன்றுமில்லாத வறியவனாக சிறையில் இருந்து வெளியில் தள்ளக் காரணமாக இருந்த ஒரு கொடூரனை….
திருநெல்வேலி ஜில்லாவில் பொதுமக்களை தாங்கவொண்ணாக் கொடுமைக்கு ஆளாக்கிய அதிகார வெறி பிடித்த ஓர் ஆங்கிலேயனை….
இந்தியர்கள் என்ற கறுப்புத் தோல்காரர்களை கேவலமாக மதித்து, அவமானப் படுத்தி அசிங்கப்படுத்திய அதிகார மமதையில் திளைத்த ஒரு அதிகாரியை….
சுட்டுக் கொன்ற வாஞ்சியின் செயலை விமர்சித்து எழுதினார் பாரதி.

அதுவும் எப்படி என்றால்… இந்து தர்ம சாஸ்திரங்களைப் படித்து அறிந்து அதன்படி ஒழுகும் ஒரு சனாதன தர்ம வாலிபன், ஆஷைச் சுட தேர்ந்தெடுத்த நேரம் தவறு என்று குறிப்பிட்டார். இரு பட்சிகள் சுகித்திருக்கும்போது, அவற்றைக் கொன்றதால் ஏற்பட்ட பாவத்தைக் கழுவ ராமாயணத்தை எழுதினான் ஒரு வேடன் வால்மீகி.
அதுபோல், நாம் நம் தர்ம சாஸ்திரத்தில் பட்சிகளும் விலங்குகளும் தனியே தங்கள் இணைகளுடன் சுகித்திருக்கும் காலத்தில் அவற்றைப் பிரித்து விடக் கூடாது, அது மகாபாவம் என்று நம்பும் போது, ஆஷ் தன் இளம் மனைவியுடன் கொடைக்கானலுக்கு மகிழ்ச்சியாக விடுமுறையைக் கழிக்கச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், அதுவும் தன் மனைவியுடன் அவன் இருக்கும் நேரத்தில் தர்ம சாஸ்திரம் அறிந்த வைதீக இளைஞன் இப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்கக் கூடாது என்று எழுதி வைத்தான்.

பாரதியின் பார்வை, அப்படி இருந்தது. இத்தனைக்கும், இந்த பாரத மாதா சங்கத்தில் இருந்த நீலகண்ட பிரமசாரியும், வ.வே.சு. ஐயரும், சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோரும் பாரதியுடன் நெருக்கம் கொண்டிருந்தனர். சங்கத்தில், ரத்தத்தைக் கண்டால் பயந்து போகும் பாரதியும் உறுப்பினராய் இருந்தாராம்.

இதுதான் சனாதன தர்மத்தின் வெளிப்பாடு. போர் என வந்துவிட்ட நிலையில், கொடூரன் ஒருவனைக் கொலை செய்யப் போகும்போதும் தர்மத்தை உபதேசித்த மனிதநேயர்கள் நிறைந்த குழு இது!

ஆனால், சாதி வெறி ஒன்றையே கட்டவிழ்த்து, பிரிவினைவாதத்தால் தங்களுக்கு அடிமைகளைச் சேர்த்துக் கொண்டே சென்ற பாதிரிமார்களுக்கு இந்த தர்ம நெறியெல்லாம் என்றைக்கு இருந்தது? மருந்தும், ரொட்டியும் கல்வியும் கூட அடுத்து அடிமையாய் ஊழியம் செய்வதற்கு என்றே வகுத்துச் செயல்பட்ட அவர்களுக்கு தர்மமாவது நியாயமாவது?

அதன் விளைவு, பாரத மாதா சங்கத்தில் இருந்த மாடசாமி போன்றவர்கள் மறைக்கப் பட்டார்கள். சாதி வெறியுடன் ஒரு அடிமை வம்சத்தை அவர்கள் தோற்றுவித்துக் கொண்டார்கள். இன்றும் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறார்கள். அடிமைகளை வலைவீசித் தேடிப் பிடிக்க, தங்கள் நபர்களையே தமிழர் எனும் போர்வையில் ஆட்டுமந்தையில் கலந்துவிட ஆடுகள் வேஷமிட்ட குள்ளநரிகளை தமிழர் பெயரில் கிடாயில் புகுத்துகிறார்கள். அவை அவ்வப்போது, ஆடுகளை இனம் காட்டிக் கொடுக்கின்றன கசாப்புக் கடைகளுக்கு!

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: