பாவூர்சத்திரம் அருகே பல்வேறு இடங்களில் திருட்டு வழக்கில் தொடர்புடைய கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேரை பாவூர்சத்திரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாவூர்சத்திரம் வட்டார பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் சமீப காலமாக நடைபெற்றது. திருட்டை அடுத்து பாவூர்சத்திரம் போலீசார் இரவு பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் (பொ) குமரேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அடைக்கலப்பட்டணம் பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த காரை நிறுத்தி அதில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணமாக பதில் தெரிவித்தனர். இதில் சந்தேகம் கொண்ட போலீசார் தீவிர விசாரணை செய்ய விசாரணையில் இவர்கள் சாலைப்புதூர், வடக்கு பூலாங்குளம், கரிசலூர், ஆவுடையானூர், கடையம், ஆலங்குளம் உட்பட பல்வேறு இடங்களில் பள்ளி, பலசரக்கு கடை, மற்றும் பள்ளிகளில் லேப்டாப், பணம் உட்பட பொருட்களை திருடிய தெரிய வந்தது.
இதனையடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட செல்லத்தாயார்புரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கனி என்பவரது மகன் கார்த்திக் (20), இவர் ஆலங்குளம் அருகே ஒரு கல்லூரியில் பிகாம் இறுதியாண்டு படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் சுரேஷ் (20), இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். அதே ஊரை சேர்ந்த வடக்குத் தெருவை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் ரமேஷ் (24), மாரியப்பன் மகன் தங்கச்செல்வன் (25) ஆகியோரை போலீசார் கைது செய்து தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது
அந்தக் காலங்களில் பள்ளிகளில் ஆசிரியரின் பிரம்புக்கு பயம் உண்டு ,மாணவன் கல்வியில் பின்தங்கி இருந்தாலும் ஒழுக்கமான மாணவன் என்கிற சான்றிதழ் ஆசிரியர் வழங்குவார் ,பெற்றோரும் ஆசிரியரை சந்திக்கும் போது நல்ல முட்டுக்கு கீழே வெளுத்து எடுங்க சார் என சொல்வதுண்டு ,இன்றோ பிரம்மை தொட்டால் ஆசிரியர் மீது அவதூறு வருகிறது இந்த இடத்தில்தான் மாணவனின் ஒழுக்கம் கேள்விக் குறியாகி விடுகிறது ,
இப்போதைய கல்வி முறை நூறு சதம் என்கிற இலக்கை நோக்கியே பயணிக்கிறது இதில் ஒழுக்கம் என்கிற வார்தைக்கு வழியே இல்லாமல் போகிறது ,மேலும் ,பெற்றோரும் குழந்தைகளை கண்டிப்பதில்லை தங்களது பிள்ளைகள் இரவில் நீண்ட நேரம் கழித்து வீடு திரும்புகையில் காரணம் கேட்பதில்லை நாளுக்கு நாள் அவன் அணியும் ஆடைகள் தொடங்கி மொபைல் போன் என அவன் பயன்படுத்த தொடங்கையில் இதற்கு உனக்கு எப்படி பணம் கிடைத்து என்கிற கேள்வியே இல்லை,
படிக்க வைத்தால் மட்டும் போதுமா ? அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்று தர வேண்டாமா ? அவனை கல்லூரிக்கு அனுப்பினால் கடமை முடிந்ததா கண்காணிக்க வேண்டாமா ? இந்த இடத்தில் பெற்றோர்கள் கவனிக்க தவறும் வாய்ப்பை மாணவன் திருட்டுக்கு பயன்படுதிகொள்கிறான் ,வீட்டில் வைத்திருக்கும் பத்து ரூபாய் காணமல் போகும் போதே விசாரிக்க தவறியோ அல்லது தனது புள்ள ஏதாவது செலவுக்கு எடுத்திருப்பான் என்கிற அலட்சியத்தின் விளைவே இப்படி திருட்டுக்கு வழி வக்குத்துவிடுகிறது என்றார் ,
தங்களது பள்ளி ,கல்லூரி மாணவன் கல்வியில் சாதனை படைக்கும் போது சொந்தம் கொண்டாடும் கல்வி நிறுவனங்கள் ,அவன் பள்ளி ,கல்லூரியை விட்டு சென்று பத்து வருடங்கள் ஆனாலும் விளம்பரம் செய்யும்போது ,அவன் படிக்கும் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்குமா ? ,
அவன் பள்ளி ,கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே திருடன் ஆவது தான் கொடுமையான விசயம் ,அந்த மாணனுக்கு கல்வியோடு கற்றுக்கொடுத்த ஒழுக்கம் என்ன ஆனது கல்வி நிறுவனங்களே மாணவர்களுக்கு தரமான கல்வியோடு கொஞ்சம் ஒழுக்கத்தையும் கற்றுத்தாருங்களேன்