07/07/2020 3:43 PM
29 C
Chennai

சத்திய முழக்கம் செய்த ஸ்வாமிஜி!

சற்றுமுன்...

பக்தர்கள் அதிர்ச்சி! திருப்பதி தேவஸ்தானத்தின் அப்பட்டமான கிறிஸ்துவ பிரசாரம்!

எப்போதும் இல்லாத விதமாக டிடிடி புதிதாக பிற மதப் பிரசாரம் செய்வது குறித்து வேதனை அடைந்துள்ளனர் பக்தர்கள்.

கொரோனா தீவிரம்: நாளை மத்தியக்குழு தமிழகம் வருகை!

மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா இந்த குழுவின் தலைவராக இருக்கிறார்.

கொரோனா: முககவசம் அணியாதவருக்கு மத்தியபிரதேசத்தில் நூதன தண்டனை!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியார் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு தண்டனையாக கொரோனா மருத்துவமனைகள்...

குளத்தை தூர்வாரும் போது கிடைத்த பழமையான மகாவிஷ்ணு சிலை!

4 அடி உயரத்தில் உள்ள மகாவிஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.

கொரோனா: எம் எஸ் யூனிவர்சிட்டி ஊழியருக்கு தொற்று!

இதனால் 3 நாட்களுக்கு பல்கலைக் கழகத்தை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டதன் பேரில், கல்லூரி மூடப்பட்டுள்ளது
3de8d25f257bbe6fbc9f8bd548b10219?s=120&d=mm&r=g சத்திய முழக்கம் செய்த ஸ்வாமிஜி!
செங்கோட்டை ஸ்ரீராம்http://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். || *இளம் வயதில் பாரம்பரியம் மிக்க ‘மஞ்சரி டைஜஸ்ட்’ இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கருத்துகளைத் தாங்கிய கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். தேசியக் கண்ணோட்டத்துடன் மற்ற மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளை மொழிபெயர்ப்பாளர் குழு மூலம் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார். பழந்தமிழ் இலக்கியத்தை புதிய கண்ணோட்டத்தில் வாசகர்களுக்கு வழங்கும் இவர், மஞ்சரி இதழில் ‘உங்களோடு ஒரு வார்த்தை’ எனும் தலைப்பில் எழுதிய இலக்கியத் தொடர் கட்டுரைகள், தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. || * சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகாபெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். || * விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி, இலக்கியம், ஆன்மிகம், வரலாற்றுச் செய்திகள் தாங்கிய ஆறு நூல்களை எழுதியுள்ளார். சக்தி விகடன் பொறுப்பாசிரியராகவும், தினமணி இணையதள செய்தி ஆசிரியராகவும் கல்கியின் தீபம் இதழ் பொறுப்பாசிரியராகவும், ஏசியாநெட் தமிழ் செய்திப் பிரிவு தலைவராகவும் பணியாற்றியுள்ள இவருக்கு கொல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. ||

vivekananda rock temple சத்திய முழக்கம் செய்த ஸ்வாமிஜி!

இந்த வருடம்… மிக முக்கியமான வருடம்.. செப்டம்பர் 11 – சுவாமிஜி சிகாகோவில் ‘சகோதர சகோதரிகளே’ என இந்திய மண்ணின் மரபுத் தத்துவத்தை முழங்கியதன் 125ஆம் ஆண்டு! இதற்காக ஒரு கவிதை எழுதித் தரக் கேட்டிருந்தார் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஸ்வாமி அபவர்காநந்தர். இந்த மாத இதழில் வெளியிட்டு அடியேனுக்கு கவிதை ஊக்கம் அளித்திருக்கிறார்.

பொதுவாக நான் கவிதை என எண்ணிக் கொண்டு எழுதுவதை விட்டு ஆண்டுகள் பலவாயிற்று! இடையில் நம் நண்பர் ‘வானரப்படை’ படத்தின் இயக்குனர் ஜெயப்ரதீப் M Jaya Pradeep சினிமாவுக்குப் பாட்டெழுதும் ஒரு முயற்சியை மேற்கொள்ள ஆசையைத் தூண்டிவிட்டார்.

அவர் மிகச் சிறந்த சிவ பக்தர். சினிமாக் காரர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தார். அவர் அலுவலகம் நுழைந்ததும் கண்ணில் பட்ட அந்த சிவலிங்க ஸ்வரூபமும் அனுமன் திருவுருவும் இன்றும் கண்களிலேயே பதிந்திருக்கின்றன… எனக்கு சினிமா என்றதும் அலர்ஜியாயிருந்தது.

அட.. நீங்க வேற…! சிவபெருமான் பற்றின பாட்டுதான்… எழுதிக் கொடுங்க என்றார். டியூனைக் கொடுத்தார். செல்போனில் கேட்டுக் கேட்டு அப்படியே பதிந்து விட்டது மனசில்.அருமையான டியூன். படம் வெளியாகும் போது, அந்த டியூன் நிச்சயம் ஹைலைட்டாகும் என்று எனக்கு உறுதியாகத் தெரிந்தது.

தொடர்ந்து நானும் எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டு ரேஞ்சுக்கு யோசித்துப் பார்த்து எழுதினேன். ரெண்டு மூணு பல்லவி, சரணம்லாம் எழுதிப் பார்த்தும் எனக்கே திருப்தியில்லை…! அதனால் அந்த சினிமா பாடலாசிரியர் – என்ற பெயருக்கு ஒரு , வைத்து விட்டேன்.

இப்போது சுவாமிஜிக்காக ஒரு கவிப் பாடல் முயற்சி!


சத்திய முழக்கம்!


செப்டம்பர் பதினொன்றென்றால் செகத்துக்கும் நினைவிருக்கு
செம்மாந்தர் நாமெல்லாம் சிறிதேனும் மறப்போமோ?

சிக்காத தத்துவத்தை சிக்கவைத்த நாயகரின்
சிக்காகோ முழக்கத்து சிறப்பான ஆண்டிதுவே!

சிக்காக் கோவில் சமயத்தின் சாரத்தை
சிறப்பாய் முழங்கிடவே சிந்திக்க வைத்தவர்தாம்!

சர்வசமயப் பேரவையில் சகோதரம் பேசிநின்றார்
சனங்களின் மனங்களிலே சிம்மாசனம் இட்டமர்ந்தார்!

பாரதத்தின் பெருமையை பாரெல்லாம் பறைசாற்ற
பாண்டியமண் அனுப்பிவைத்த வங்கத்தின் வான்முகில்!

நரர்களில் இந்திரனாய் நற்பெயர் கொண்டிருந்தார்
நம்மாந்தர் மட்டுமல்ல நாற்திசையும் நலமாச்சு!

விவேகத்தின் இருப்பிடமாய் உலகத்தில் காட்டியவர்
ஆனந்த சாரத்தை அலுக்காமல் உபதேசித்தார்!

ஆன்மாவை உணர்ந்தால் சமயத்தை உணரலாம்
சமயத்தின் ஆன்மாவை உணரவைத்தார் சுவாமிஜி

தோன்றுகின்ற ஓடையெலாம் சாகரத்தில் சங்கமிக்கும்
பேணுகின்ற மதங்களுமே பேரிறையில் போய்ச்சேரும்!

என்னைஎண்ணி எந்தவழியில் எவர்வந்தாலும் ஏற்கின்றேன்
எந்தவழியில் வந்தாலும் என்னையேதான் அடைந்திடுவார்

கீதையின் தத்துவத்தைக் கணீர்க்குரலால் காட்டிநின்றார்
பாதையின் மகத்துவத்தை பாரிலுள்ளோர் புரிந்துகொண்டார்

பிரிவினைவாதமும் மதவெறியும் அழகியஉலகை உருக்குலைக்கும்
சரிவினைத்தடுத்து சீர்செய்தால் சனங்களும்சுகமாய் வாழ்ந்திருக்கும்!

சத்தியத்தின் தத்துவத்தை சந்தனத்தின் நறுமணத்தை
சிந்திக்க வைத்ததுதானிந்த சிக்காகோ முதல்முழக்கம்!

~ செங்கோட்டை ஸ்ரீராம்

(செப்டம்பர் 2018 இதழில் வெளிவந்த கவிதை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad சத்திய முழக்கம் செய்த ஸ்வாமிஜி!

பின் தொடர்க

17,869FansLike
78FollowersFollow
70FollowersFollow
905FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கைபரு… போலனு… ஆரியனு… வுட்ட கதையும் உடாத உண்மையும்!

கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய பிராமணர்கள், இங்கு மனு தர்மப்படி மனிதர்களை பிரித்து, அவர்கள் மட்டும் கல்வி கற்கும்படி செய்துவிட்டார்கள்

சமையல் புதிது.. :

சினிமா...

விஷால் மேனேஜர் கார் கண்ணாடி உடைப்பு!

வந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகாரளித்துள்ளார்.

ஓடிடியில் ஷகிலா வாழ்க்கைத் திரைப்படம்! படக்குழு முடிவு!

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள்

அஜித் கொடுத்த வாழ்வு: நெகிழும் பிரபல இயக்குநர்!

அஜித் அவர்கள் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கும் நம்பிக்கையை தருபவர்.

பிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

தந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்

விஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை!

பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

செய்திகள்... மேலும் ...