
விகடன் பிரசுரத்தில் இருந்தபோது எழுதிய 1857ல் தமிழ் மண் – நூலின் 10 ஆம் அத்தியாயத்தின் நூல் வடிவத்தை இங்கே இணைத்திருக்கிறேன்.
ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்க்- ஐ க்ளிக் செய்து படியுங்கள். வெறும் 8 பக்கம் மட்டுமே இணைத்துள்ளேன்.
இதைப் படித்து முடித்த பிறகு, இனி நான் இங்கே உங்களுடன் பகிரப் போகும் விஷயத்தை ஆழப் புரிந்து கொள்ளவும்!
***
2008ல் இருக்கும். 1857ன் முதல் சுதந்திரப் போராட்டத்தின் 150 ஆம் ஆண்டு தினத்தைக் கொண்டாடினோம்.
அப்போது, அடியேனும் ஏதாவது செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தில், இந்த நூலைத் தொகுத்து எழுதினேன்.
சென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள ஆவணக் காப்பகம் மற்றும் பி.ஸ்ரீ. தொகுத்திருந்த ராபர்ட் கிளைவ் முதல் ராஜாஜி வரை -கட்டுரைத் தொகுப்புகள், வி.டி. திவாகர் மற்றும் கே.எம். ராவ் தொகுத்த ஒரு நூல் இவற்றைத் துணையாகக் கொண்டு…
1857ல் முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, தமிழகத்தில் நிலை எப்படி இருந்தது என்பதை 10 அத்யாயங்களில் 128 பக்க சிறு நூலாகக் கொடுத்தேன்.
இந்த நூல் வந்த சில நாட்களில், பரமக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில் இருந்து வரிசையாக நாலைந்து செல்போன் அழைப்புகள்…
தொடர்பு கொண்ட அனைவருமே இஸ்லாமியர்கள்தான்! அவர்களில் 3 பேர் தாங்கள் இஸ்லாமியப் பள்ளியில் (மதரசா) பயில்வதாகக் கூறினர். மேலும், இது போன்ற நூல்களை நீங்கள் அதிகம் எழுதவேண்டும் சார்.. என்றும் ஊக்கப் படுத்தினர்.
நான் அவர்களிடம் உற்சாகத்தில், ”மிகவும் சந்தோஷம். நீங்கள் இந்த நூலின் கருத்துகளைப் படித்து, நம் நாட்டின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளக் காட்டிய ஆர்வமும், இந்தப் பாராட்டுதலும் எனக்கு மேலும் ஊக்கம் அளிக்கிறது. நிச்சயமாகச் செய்கிறேன்” என்று நன்றி தெரிவித்தேன்.
அவ்வாறு, இஸ்லாமிய இளைஞர்கள் இந்த வரலாறை அவ்வளவு தூரம் ஊன்றிப் படித்து பாராட்டும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது..?
நம் நாட்டின் உண்மை வரலாறுதான்!
முதல் இந்திய சுதந்திரப் போர் காலகட்டத்தில், சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்களில் கணிசமான அளவில் இஸ்லாமியர்கள் இருந்தனர். தில்லிப் பேரரசின் கடைசி அரசரான பகதூர்ஷா ஜாபரின் ஆட்சியை நிலைநாட்ட, வடக்கேயுள்ள இந்துக்களும் இஸ்லாமியர்களும் கைகோத்து, ஆங்கிலேயருக்கு எதிராகக் களம் கண்டனர். அப்போது, எத்தனையோ கசப்புணர்வுகள் இருந்தும், அனைத்தையும் மறந்து, இந்து இஸ்லாம் பாகுபாட்டைத் துறந்து, இரு தரப்பும் கைகோத்தனர்.
பொது எதிரி ஒருவன் இருந்த போது இருவரும் இணைந்து செயல்பட்டது, தமிழகத்திலும் எதிரொலித்தது. அப்போதைய சுதந்திரக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை தேசத் துரோக குற்றம் சுமத்தி, அந்தமானுக்கும் பர்மாவுக்கும் சிறைக்கு அனுப்பியது ஆங்கிலேய கம்பெனி அரசு. அப்போது பிரிட்டிஷ் ராணியின் நேரடி ஆளுகையில் வரவில்லை. கம்பெனியாரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. 1857 போர் நிறைந்த பின்னரே, பிரிட்டிஷ் அரசியாரின் கட்டுப்பாட்டுக்கு இந்திய பகுதிகள் வந்தன.
அவ்வாறு நாடு கடத்தப்பட்ட, தேச துரோகியர் என குற்றம் சாட்டப்பட்டவர்களில் இந்துக்களோடு கூட, இஸ்லாமியர்களும் கணிசமான அளவில் இருந்தனர். அவர்களும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தது காரணம்.
அப்போதைய நோக்கம்… பகதூர் ஷாவை மீண்டும் அரியணையில் அமர்த்துவது. அதற்கு ஆதரவாக இருந்தவர்கள் (மங்கள் பாண்டே) நானாசாஹப் பேஷ்வா, தாத்தியா தோபே உள்ளிட்ட இந்து மன்னர்கள்.
இரண்டாம் சுதந்திரப் போர் நேரத்தில், ஒரு வேளை, ஜின்னாவுக்கு பட்டாபிஷேகம் செய்வோம் என நேரு ஒதுங்கியிருந்தால்…. இந்தியப் பிரிவினை நடந்திருக்காதோ என்னவோ? நம் குதர்க்க புத்தி அப்படியும் எண்ணத் தோன்றுகிறது.
***
இப்போது விஷயத்துக்கு வருகிறேன்….
சென்ற ஆண்டு, ராமேஸ்வரம் சென்று விட்டு, ரயிலில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன்.
காலை நேரம் ரயில் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தபோது….
எதிரே சீட்டில் அமர்ந்தபடி, இஸ்லாமிய சிறுவர்கள் சிறுமியர் நாலைந்து பேர் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு பிஞ்சு, வயது அனேகமாக 3 இருக்கக் கூடும்… என் நெற்றியில் அப்போது ஒற்றைக் கீற்றாய்த் தெரிந்த ஸ்ரீசூர்ணக் காப்பைக் கையைக் காட்டி… ”அவரு நெத்தில ரத்தம் … அவரு நெத்தில ரத்தம்” என்று சிரித்தான். அருகில் இருந்த மற்ற சிறுவர்களும் சிரித்தனர்.
இவர்கள் குழந்தைகள் என்ற எண்ணத்தால், அதைப் பெரிதாக நான் எடுத்துக் கொள்ளவில்லை… ஆனால், என் அருகே அமர்ந்திருந்த அந்தச் சிறுவனின் முக்காடிட்ட தாயும் குல்லா போட்ட தகப்பனும்… அந்தச் சிறுவர்களைக் கண்டித்தோ, கடிந்தோ, அல்லது டேய் அப்படி சொல்லக் கூடாது என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்தோ.. அடக்க முற்படவில்லை. அவர்களும் சேர்ந்து வாயை மூடி சிரித்துக் கொண்டனர்.
நாமாக இருந்தால், நம் குழந்தைகளை எப்படி அதட்டுவோம்??? அவர்கள் மனம் புண்படும் என்று கண்ணீர் வடித்து, ச்சீ.. சூ… தூ.. என்றெல்லாம் அடக்குவோமே! அந்த இங்கிதம் கூட இல்லாத இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இப்போது தமிழகத்தில் அதிகரித்து விட்டது. #சகிப்புத்தன்மை
** கறுப்புக் கண்ணாடி கயவன் உதிர்த்த அதே தரங்கெட்ட காழ்ப்புணர்வு வார்த்தை இப்போது நினைவில் வந்தது. **
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல… பல சம்பவங்கள் ! இப்போது எனக்குள்ளும் பிடிவாத குணம் …! பளிச் என்று முழு திருமண் காப்பும், குடுமியும் வைத்துக் கொண்டு… எவன் என்ன சொல்கிறான் பார்ப்போம் என்ற ரீதியில் வீம்புக்கு செயல்படும் அளவுக்கு புத்தி செல்கிறது!
மூட நம்பிக்கை ஒழிப்பு என்று கூட்டம் போட்டால்.. இஸ்லாமியர்கள் பெருமளவில் இருக்கும் அவர்களின் பகுதிகளில் சென்று பிரசாரம் செய்ய வேண்டும். அதை விடுத்து, ஷிர்க் மாநாடு என்று, இந்த நாட்டின் பன்முகத் தன்மைக்கு சவால் விடும் வகையில் பயங்கரவாதத்தைப் பரப்பும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களை ஓட்டுக்காக வளர்த்து விட்ட திமுக.,வும், அதிமுகவும்., இதற்காக மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு விரைவில் தள்ளப்படுவார்கள்.
இப்படி ஒரு மாநாட்டுக்கு அனுமதி கொடுத்து, மற்ற மக்களிடையே காழ்ப்புணர்வையும், மக்களிடையே பிரிவினையும் வளரவிட்டுக் கொண்டிருக்கும் காவல்துறை, இதற்காக பின்னாளில் பெரிய விலை கொடுக்க நேரும் ! ஏற்கெனவே ஆம்பூரில் ஒரு ரவுடியிஸத்தைப் பார்த்திருப்பார்கள். அதை நிச்சயம் அவர்கள் மறக்க மாட்டார்கள்.
இத்தகையவர்கள்:, தங்களின் பிரிவினைவாத காழ்ப்புணர்வு மத வன்முறைச் செயல்கள் மூலம், இந்து – இஸ்லாமியர்களின் ஒற்றுமையே நாட்டின் முன்னேற்றம் என்று காந்திய வழியில் கனவு கொண்டிருக்கும் என் போன்றோரின் கனவுகளுக்கு வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இஸ்லாமியர்களையும் பயங்கரவாதிகளையும் இதுவரை பிரித்தே அறிந்து, சில சிறுகதைகள் வாயிலாக, மனித நேயத்தை வெளிப்படுத்தும் வகையில் என் உணர்வுகளையும் பதிந்து வந்தேன். ஆனால், தங்கள் செயல்களால், இரண்டும் வேறல்ல என்ற எண்ணத்தை இவர்கள் விதைக்கும்போது, நாம் என்னதான், சமரச நோக்கோடு சமுதாய ஒருங்கிணைப்புக்கு முயன்றாலும், அது இயலாமல் போகும்!
எனவே, நல்ல மாற்றத்தை, சமரச நோக்குள்ள இஸ்லாமியப் பெரியவர்களின் வார்த்தைகளில் இருந்தே நானும் எதிர்பார்க்கிறேன்!
***
1857ல் தமிழ் மண் – அத்யாயம் 10ஐப் படிக்க…
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.