23/09/2019 12:50 PM

உங்களோடு ஒரு வார்த்தை

தில்லி – அழகான தூய தமிழ்ப் பெயர்தான்! எப்படி தெரியுமா?

தமிழர்களே... தில்லி - தமிழ்ப் பெயர்ச் சொல். வடக்கு வாழ்ந்தாலும், தெற்கு தேய்ந்தாலும், தெற்கு கொடுத்த பெயரே வடக்கே ஆள்கிறது. ஹிந்தியைத் திணிக்கவும் ஆளவும் அவர்கள் முயன்றாலும், இயல்பாக தமிழ்ச் சொல்லே தில்லியின் பெயரில் ஆள்கிறது என்று எண்ணி நாம் ஆறுதலும், பெருமிதமும் அடையலாம்!

சிரிக்கலைன்னா ஓர் அடி விழும் ஜாக்கிரத…! தென்கச்சி சொன்ன கதை

இந்த மாதிரிதான் பல பேருங்க எதை எதை எப்ப எப்பச் செய்யணுமோ அதை அதை அப்பப்ப செய்யாம பின்னாடி காலங் கடந்து செய்யறாங்க. அதுனால அவங்களுக்கும் கஷ்டம். மத்தவங்களுக்கும் கஷ்டம்கறதை அவங்க புரிஞ்சுக்கணும்

செங்கோட்டை: பாகப் பிரிவினையின் சோக வரலாறு!

2016 நவம்பர் 1: செங்கோட்டை தாலுகாவின் ஒரு பாதி, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைந்ததன் 60ஆம் ஆண்டு! 1956ல் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, மாநிலச் சீரமைப்பு நடைபெற்ற போது, தமிழ்நாட்டின், தமிழ் மண்ணின், தமிழ் மொழியின்,...

90 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் லிப்கோ புத்தக நிறுவனம்!

சென்னை: தி லிட்டில் ப்ளவர் கம்பெனி - லிப்கோ பதிப்பக நிறுவனம், 90 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பதிப்பகத் துறையில் ஈடுபட்டு பல்வேறு ஆன்மிக தத்துவ வரலாற்று நூல்களை வெளியிட்டு வரும் இந்நிறுவனம் 90ஆவது ஆண்டைக் கொண்டாடுகிறது.

ஆயுர்வேத ரகசியங்கள்

ஆயுர்வேதரகசியங்கள் மூளை முதல் மலக்குடல் வரை...உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள் நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய...

தேசியக்கவி சுப்ரமண்ய பாரதியார்: : மகாகவியின் நினைவில்!

மகாகவி சுப்ரமணிய பாரதியார் மகாகவி சுப்ரமணிய பாரதியார் 18,19 ஆம் நூற்றாண்டுகள், உலகின் பெரும்பாலான பகுதிகளில் புரட்சிக்கனல் வெடித்து சுதந்திர தாகம் மக்களிடையே நிலைகொண்ட நூற்றாண்டுகள். அடக்குமுறையை எதிர்த்து எளியோர் போராட உத்வேகத்தை அளித்தவை, அந்நாடுகளின்...

ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸில் இருந்து ஏன் வெளியேறினார்?

அப்போது ராஜாஜி சொன்னார்... நீ இயக்கத்தில் இருந்தால்தானே கணக்கு கொடுக்கணும்? பொறி தட்டியது ராமசாமி நாயக்கருக்கு! என்ன சொல்கிறீர்? - கேட்டார். ஏதாவது காரணத்தைச் சொல்லி இயக்கத்தில் இருந்து வெளியேறினால், நீ ஏன் கணக்கு கொடுக்கணும்!? - என்றார்.

கவிஞர் வாலி : ஆத்மாவின் சங்கமம்!!

சிலரின் நடவடிக்கைகளைப் பார்த்து.... கேட்டு... நமக்குள் அவரைப் பற்றிய ஒரு பிம்பத்தை வரைந்து கொள்வோம். சிலரைப் பற்றிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வோம். ஆனால் பலநேரங்களில் அவை பொய்த்துப் போகும். கவிஞர் வாலியைப் பற்றி என்னுள்...

நெல்லை- தருவை வாழவல்லப பாண்டீஸ்வரர் திருக்கோயில்

அண்மையில் மேற்கொண்ட நெல்லை பயணத்தில் உருப்படியாக சில தலங்களை தரிசிக்க முடிந்தது. நவதிருப்பதி கோயில்கள், திருச்செந்தூர் முருகன்... கூடவே இரண்டு சிவன் கோயில்கள். ஒன்று தருவை வாழவல்லப பாண்டீஸ்வரர் கோவில்! (முன்னாள் தலைமைத்...

திருமூர்த்திமலையில் ஒரு குண்டலினி தியானம்!

திருமூர்த்திமலையில் அமைந்துள்ள உலக சமாதான மையம் போகிறோம், அங்கே பிரமிட் ஆலயத்தில் தியானம் செய்துவிட்டு, பரஞ்சோதி மகானிடம் சற்று நேரம் பேசப் போகிறோம், நீங்களும் வாருங்கள் என்று அழைத்தார் கலைமகள் ஆசிரியர்.  மேற்குத்...

நீயும் நானும்: கோபால்தாசனின் கவிதை நூல் விமர்சனம்!

நீயும் நானும் : கவிஞர் கோபால் தாசன் எழுதிய கவிதை நடையிலான சிறுகதை நூலுக்கு எழுதிய முன்னுரை: அறிமுக உரை! *** சென்ட்ரலில் மையம் கொண்ட மனப் புயல்!   நீயும் நானும் - ஏதோ ஒரு சிறு...

தமிழக ஞானப் பரம்பரையில் வந்த பெண் கவி : செங்கோட்டை ஆவுடையக்காள்

வாரும் சோதர சோதரிகாள்... கணீரென்று ஒலித்து கவனத்தை ஈர்க்கும் கூட்டுக் குரல்கள். கூடவே கிண்கிணியாய் ஒற்றை ஜால்ரா சப்தம். கால்கள் தாமாகவே விரைகின்றன. மயக்கும் சங்கீதம். சரி.. யாரை அழைக்கிறார்கள்? எதற்காக..? தங்கள்...

வரலாற்றின் பக்கங்களில்: அக்பருக்கு உயிர்ப் பிச்சை அளித்த மாதரசி

இந்த வரலாற்று ஆவண ஓவியம் பிக்கானேர் அருங்காட்சியகத்தில் "உயிர் பிச்சை கேட்கும் அக்பரின் நெஞ்சின் மேல் கால் வைத்து ... கத்தியோடு நிற்கும் கிரண்தேவி" என்ற தகவலுடன் ஒரு வரலாற்றுச் சம்பவத்தைத் தாங்கிக் கொண்டுள்ளது.

நட்பு- கொள்ளலும் விடுத்தலும்!

சில நேரங்களில் படி படி எனப் படித்தால், பிடி பிடி எனப் பிடிக்கும்படியாய் ஆகியிருக்கிறது... 'உடும்புப் பிடி’ ... 'சிக்’ எனப் பற்றுதல் என்று ஒரு சொலவடை நம் வழக்கில் உண்டு. அதாவது ஒன்றைப்...

ஆலயப் பராமரிப்பு: எங்கே செல்கிறோம் நாம்?

தமிழகத்தை ஆலயங்களின் கோட்டை எனலாம். தமிழகத்தில் கலையும் கலாசாரமும் வளர்ந்த பண்பாட்டுக் கேந்திரங்கள் ஆலயங்கள். இங்கே மன்னர்களால் கட்டி வைத்த கோயில்கள் இன்றும் அவர்களின் புகழைத் தாங்கிக் கொண்டு, காலத்தை வென்று நின்றுகொண்டிருக்கின்றனர். ஓர்...

உள்ளத்தில் கள்ளம் இருந்தால் சர்க்கரையும் உப்பாகும்!

நண்பர்களாகட்டும்... சில மனிதர்களாகட்டும்... அல்லது சில அழகுக் காட்சிகள், படங்கள், புகைப்படங்கள்... போன்றவைகளாகட்டும்..., எல்லாம் நம் மனசு நன்றாக இருக்கும்போதுதான் அந்த...

ஏ தெய்வமே! உனக்கு இதயம் இருக்கா?

“ஏலே, மண்டையில உனக்கு அறிவிருக்கா…? ” - ஏதோ சிறு தவறு செய்துவிட்ட சிறுவனைப் பார்த்துக் கேட்டார் ஒருவர். இந்தக் காலப் பையனில்லையா அவன்… “உங்கள்ட்ட இருந்தா கொஞ்சூண்டு குடுங்க…!” - வெடுக்கெனச் சொல்லி விட்டான். இவர்...

அருளிச் செயலில் மாமுனிகளும் தேசிகரும்

அண்ணா... நாங்க சமாஸ்ரயணம் செய்துக்கப் போறோம். நீயும் வாயேன்..! என் தங்கை அழைத்தபோது, சரி வரேன் என்றேன். 4 வருடங்களுக்கு முன்னர் இருக்கும். அப்போது நான் தினமணி இணையதள ஆசிரியர் பொறுப்பில் இருந்த நேரம். ஒற்றை நாளை...

பேராசிரியர் இல.ஜானகிராமன் நினைவலைகள்:: கம்பன் என்ற கணக்குச் சக்கரவர்த்தி

இலக்கியச்சாரல் அமைப்பில் இருந்து ரசிகமணி டிகேசி நினைவு விழா நடத்துவதாகவும், அதற்கு, செங்கோட்டையில் இருந்து ஜனார்த்தனன் சாரை அழைத்து வர முடியுமா என்றும் கேட்டார் அந்த அமைப்பின் நிறுவனர்...

புதிய காலத்தின் பிறப்பை அறிவித்த ஒளிமிக்க யுகப்புருஷன் பாரதி..!

‘எமக்குத்தொழில் கவிதை, நாட்டுக் குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்!’ தமிழ் மகாகவி பாரதியின் பிரகடனம் இதுவென்று சொல்லத்தேவையில்லை. தான் சொன்னதுபோல் நடந்து கொண்டவன் அவன். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் எந்த வித வித்தியாசமும் இன்றி வாழ்ந்தவன் மகாகவி...