Home இலக்கியம் கவிதைகள் அடக் கடவுளே… இன்னும் எத்தனை நாள் … இந்த…

அடக் கடவுளே… இன்னும் எத்தனை நாள் … இந்த…

10 June01 sun
10 June01 sun

வருடாவருடம்…!
இரவு தரையில் தலையணை வைத்து படுத்தேன்
தரை தோசைக்கல்போல் சுட்டது
நான் தோசை போல் சூட்டை உறிஞ்சினேன்

பொறுக்கமுடியாமல் தோசைத்திருப்பி இல்லாமலே
முதலில் குப்புறத் திரும்பி
பின் மல்லாக்கப் படுத்து
சூட்டில் வறுபட்டு

எண்ணெய் இல்லாமலேயே
ஹெல்த்தியாக கோதுமை நிறத்துக்கு மாறினேன்

சட்னி துணை வருமோ என்று பார்த்தால்
பிரிட்ஜில் ஜில்லென்று ஒளிந்திருந்தது – சாம்பார்
எரிச்சலடைந்து ஆவியாகி
காற்றில் கலந்திருந்தது.

என்னை நானே மடித்துக் கொண்டு
என் வாழ்க்கை இவ்வளவுதான் என்றுணர்ந்து
ப்ளெயின் தோசையாக சுட்டு,
வறுபட்டு, வெந்து, பிய்ந்து, கருகி …
ம்… இப்படித் தரையில் கிடக்கையில்

காலையில் சூரியன்
போர்க் எடுத்து குத்த ஆரம்பித்தான்
அவனுக்கு ப்ரேக்பாஸ்ட் வேணுமாம்.

அம்மா…! கடவுளே!
இன்னும் எத்தனை நாள் இந்த வெய்யில்…?

  • தெலுங்கில்: உஷா துரகா ரேவல்லி
    தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version