Home இலக்கியம் வாணியவள் போலிருக்கக் கண்டேன்!

வாணியவள் போலிருக்கக் கண்டேன்!

sarathambal
sarathambal Ninthday of Sri Sarannavarathri Utsav at Shencottah Branch of Sringeri math Sri Sharadambal

“வாணியவள் போலி ருக்கக் கண்டேன்”
– மீ.விசுவநாதன்

வெற்றிவெற்றி வெற்றி என்றே ஆச்சு – மன
வேதனைகள் சுக்குசுக்காய்ப் போச்சு
பற்றுவிட்ட ஞானி பார்த்த தாலே – “நான்”
பட்டதெலாம் விட்டோடிப் போச்சு

வந்தவழிப் பாதை துன்ப இன்பம் – நான்
மறுபடியும் வாராது ஆச்சு
இந்தநொடிப் பொழுது ஞானி மூச்சு – அட
இனியெனக்கு அவரென்றே ஆச்சு

ஒட்டுறவு மாய வேலை எல்லாம் – அவர்
தொட்டவுடன் மாயமாகிப் போச்சு
தட்டியெனை எழுப்பி விட்டுப் பார்த்தார் – நான்
தடம்மாறிப் போகாது காத்தார்

வாணியவள் போலி ருக்கக் கண்டேன் – அவர்
மனத்துள்ளும் அடியேனைக் கண்டேன்
தோணியெனத் தொற்றிக் கொண்டு விட்டேன் – பிரி
தோர்பிறப்பு பற்றதனால் விட்டேன்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version