Home இலக்கியம் கவிதைகள் வரும் காலம் வளமாக… நல்லதைக் காண… நாம் புறப்படுவோம்!

வரும் காலம் வளமாக… நல்லதைக் காண… நாம் புறப்படுவோம்!

vetrivel
vetrivel

வேல் என்றால்
விலகி நிற்கும் கூட்டமொன்று
ஊர் காக்க வருவதாய்
வேடம் கட்டி வருகிறது..

இட்ட திருநீறும் குங்குமமும்
பொய்யென உரைத்த கூட்டமொன்று
பகைமையகற்றி நட்பென
நஞ்சுடன் வருகிறது.

தாயை பழித்த – கோதை
தாயை பழித்த கூட்டமொன்று
நீலிக்கண்ணீர் நிரம்ப
வஞ்சக நெஞ்சமுடன்
நம்மருகே வருகிறது

தையது திங்களும் – தீபத்திரு நன்நாளும்
விடுமுறை தினமென உரைத்திட்ட
தந்திர நரியொன்று
நம் குடிகெடுக்க வெறியுடன்
வேகமாய் வருகிறது

உன்னகத்தில் பெண்ணுண்டு
என்னகத்தில் பெண்ணுண்டு
ஒப்புக்காகாத படிவத்துடன்
களவுக் கூட்டமொன்று
நம் மானம் களவு கொள்ள
கயமையுடன் வருகிறது.

அகத்தில் சாதியில்லை
புறத்தில் சாதியில்லை
ஆலயத்தில் சாதியில்லை
ஆனால்
அரசில் மட்டும் சாதி கொண்டு
நம்மைப் புறந்தள்ளும் கூட்டமொன்று
புறப்பட்டு வருகிறது.

ஆண்ட பரம்பரையும்
தோற்றுப் போகும்
அதிகார வர்க்கமும்
வியந்து போகும்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
பாதை சமைத்தால்
வீண் சொத்தினுள் ஏராளம் எஞ்சி நிற்கும்.

நெஞ்சுக்கு நீதியென
எம்மண்ணுக்கு அநீதியுரைத்த
வஞ்சகரின் மக்குப் பிள்ளையொன்று
மீண்டும் இம் மண்னை நஞ்சாக்க வருகிறது

விதை மட்டும் நிழலல்ல
விரல் மையும் நிழலாகும்
ஆனைமகன் வென்றெடுத்த மாங்கனி போல்
ஈசனவன் குளிர் கொள்ளும் வில்வ இலை போல..
ஸ்ரீயவள் நித்யமாய் வசிக்கும் தாமரை மலர் போல
வரும் காலம் வளமாக
நல்லதைக் காண நாம் புறப்படுவோம்.

  • மீனம் ஐயப்பன்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version