Home இலக்கியம் கவிதைகள் ஆன்மிகக் கவிதைகள்: காத்திடு முருகா! அரோகரா அரோகரா!

ஆன்மிகக் கவிதைகள்: காத்திடு முருகா! அரோகரா அரோகரா!

deepavali-murugan
deepavali-murugan

ஆறுமுகனின் புகழ் பாடியே இன்புறுவோம் !
கந்தனின் நாமம் ஒன்றே நம் ஆயுள் காப்பீடு!
கவிதைகள் : கமலா முரளி

அரோகரா ! அரோகரா !

முத்துக்குமரன் நம்
                  நெற்றியைக் காக்க !
கந்தவேலன்  நம்
                   கண்களைக் காக்க !
முக்கண்ணன் மகன் நம்
                மூக்கினைக் காக்க !
நூபுர கிண்கிணி நாதன் நம்
                  நுரையிரல் காக்க !
இடும்பாயுதன் நமை
        இருமலிலிருந்து காக்க !
மருதமலை முருகா
          மூச்சுதிணறலில் இருந்து காக்க !
கதிர்வேலன் நமை
          கடும் நோயிலிருந்து காக்க !
வெற்றிவேல் வித்தகன் நமை
           வைரஸிலிருந்து  காக்க !
கோழிக்கொடியோன்
               கொரானாவிலிருந்து காக்க !
கந்தவேல் முருகனுக்கு
                அரோகரா ! அரோகரா !

murugan krauncha malai

சண்முகா சரணம் !

கஜானன் கால் பணிந்து
கமலப் பெண் படிக்கும்
கந்தனின் கவசம் இது !

கலைமகளை தொழுது
கந்தன் புகழ் பாடிடுவேன் !

வடபழனி ஆண்டவனே !
இடர்கள் தீர்த்திடுவாய் !

வள்ளி மணாளனே ! செல்வம்
அள்ளி அருளிடுவாய் !

நம்பித் துதிப்போர்க்கு
நல்லருள் வழங்கிடுவாய் !

வெம்பி வதங்கிடாமல்
விரைந்தே வந்திடுவாய் !

முன்னின்று காத்திடப்பா !
முப்போதும் காத்திடப்பா !

சிரசாம் தலைதனை
    சிக்கல் சிங்காரவேலன் காக்க !

நெற்றி, புருவத்தை
    நெற்றிக்கண்ணன் மகன் காக்க!

கண்களை, காதுகளை
    கந்தகோட்ட வேலவன் காக்க !

மூக்கினை, நாசித் துவாரங்களை
    முத்துக்குமரன் காக்க !

வாய், இதழ்கள், பற்களையும்
    வல்லக்கோட்டை முருகன் காக்க

தொண்டை, சுவாசக் குழல் தனை
    தொண்டைநாட்டு
                  தணிகைவேல் காக்க!

மார்பையும் இதயம், நுரையீரலை
       மருதமலை முருகன் காக்க !

வயிற்றையும், உதரத்தையும்
      வள்ளி மணாளன் காக்க !

கைகளையும் , கால்களையும்
       கங்காதரன் புதல்வன் காக்க !

ஆண், பெண் இலச்சினைகள்
    ஆனைமுகத்தோன் தம்பி காக்க

உள்ளுறுப்புகள், சுரப்பிகளை
      உமைமைந்தன் காக்க  !

சித்த சுத்தியை சிவசுப்பிரமணியனே நீ தந்திடுவாய் !

கிருமிகளில் இருந்து
கார்த்திகை பாலா நீ
காத்திடுவாய் !

நோய் எதிர்ப்புச் சக்தியை
நூபரமணிந்த பாலசுப்ரமணியா
நீ தந்திடுவாய் !

போற்றுகிறோம் !
போற்றுகிறோம் ! கந்தா உனைப்
போற்றுகிறோம் !

எல்லாத் தொழிலும் சிறக்கச் செய்வாய்
எட்டு குடியில் வாழ் எம் தலைவா !

இயல்பாய் வாழ்க்கை இயங்கிட வைப்பாய்
இமவான் மகள் பெற்ற இளங்குமரா !

பணிந்திட்டோம் உன் பாதம் !
பக்கமிருந்து காத்திடுவாய் !

சரணமடைந்திட்டோம் !
சங்கடம் தீர்த்து ஆட்கொள்வாய் !

சரணம் ! சரணம் !
கோவே சரணம் !
சரணம் சரணம் !
சண்முகா சரணம் !

2 COMMENTS

  1. அருமை கமலா முரளி அவர்களே, சூலமங்கலம் சகோதரிகள் குரலில் படித்துப்பார்த்தேன் அருமையாகப் பொருந்தி வருகிறது.

  2. அருமை நட்பே, கோயிலுக்கு செல்ல முடியாத இக்காலத்தில் வீட்டிலிருந்தே முருகன் நாமத்தை நமஸ்கறிக்க செய்தமைக்கு…வாழ்த்துக்கள் .

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version