Home இலக்கியம் கவிதைகள் பாரதி-100: பாரதி படையல்!

பாரதி-100: பாரதி படையல்!

chellamma-bharathi
chellamma bharathi

தேசியக்கவியின் நூற்றாண்டு நினைவில்…
தினம் தினம் – பாரதி தினம்!

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு நூற்றாண்டை தேசிய எழுச்சி ஆண்டாக நாம் கடைப்பிடிக்கிறோம்.

இந்த ஆண்டு முழுதும், பாரதியார் குறித்த கட்டுரைகளை ஒவ்வொரு நாளும் பல்வேறு எழுத்தாளர்கள், அன்பர்களிடம் இருந்து பெற்று நம் தமிழ் தினசரி ( https://dhinasari.com ) தளத்தில் பதிவு செய்யவுள்ளோம்…

கட்டுரைகளை அன்பர்கள் [email protected] இமெயிலில் அனுப்பி வைக்கலாம்.

barathiyar

பாரதி ! – எனக்கும் அவனுக்குமான உறவை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை…..
இளம்பிராயத்திலேயே என் அம்மாவால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டான் இந்தப் பெருங்கவிஞன்….
அவன் கைபிடித்தே வளர்ந்தேன்…..
அழுகை வந்தால் அவனிடமே சாய்ந்தேன்….

மொழி , நாட்டுப்பற்று, இறை பக்தி, காதல் , நிலையாமை , தவம், ஞானம் என அருகேயேயிருந்து அத்தனையும் சொல்லிக்கொடுத்தான்…..

அவனால் வளர்க்கப்பட்ட ஆயிரமாயிரமானவர்களுள் நானும் ஒருவன் !

பத்தாம் வகுப்பு பரிட்சைக்கு முந்தைய நாள்,
அறிவியல் பாடத்தில் ஐயம் ஒன்றை தீர்க்க ஆர்வமுடன் வீடு வந்தான் நண்பனொருவன் ,
ஒரு புத்தகத்தில் முகம் தோய்த்து, கண் கலங்க இருந்த என்னை உசுப்பினான்…..

நாளைக்கு பொதுத் தேர்வை வைத்துக் கொண்டு பாரதியின் கவிதைகளை படித்துக்கொண்டிருக்கிறாயே அஸ்வத்?!?! என்றான். இன்றும் அடிக்கடி சொல்வான், இந்த சம்பவத்தை……

இங்கு பாரதியின் தாக்கமின்றி ஒரு தமிழனும் வாழ்வதில்லை…

அப்படி , பாரதியின் தாக்கம் ஒருவனிடம் இல்லாமல் போனால் அவன் தமிழனே இல்லை !

இன்று , அவன் சொல்லிக்கொடுத்த தமிழ் பாசம், நாட்டுப்பற்று , இறை பக்தி, அத்தனையையும் தின்று தீர்த்துக் கொண்டிருக்கிறது இந்த திருட்டு திராவிடம் !

“சாதிகள் இல்லயடி பாப்பா” என்று சொன்னவனையே சாதி பார்த்து ஒதுக்கி வைத்த இந்த திராவிடம் …..

“தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற வசை என்னால் அழிந்தது” என்று பாடிய பாரதியின் வாரிசுகள் ,
நம் கண் முன்னமே …

“மெல்ல ” அல்ல….

மிக வேகமாக அழித்துக் கொண்டிருக்கிறது நம் தமிழ் மொழியை!

‘தமிழ் எழுத்துக்களை அழித்துவிட்டு அகர வரிசைப்படி ஆங்கிலத்தில் எழுதுங்கள் ‘ என அறை கூவல் விடுத்த அறிவிலி ஈவேரா வின் குஞ்சுகள் , தங்கள் தந்தையின் ஆணையை சிரமேற்கொண்டு தமிழை சீரழிக்க எடுத்த முயற்சியின் வாயிலாய்….

ஒரு மொழியாய் மட்டுமே கல்வியில் , சுருக்கி,
பின் அதனையும் அவசியமில்லை என்றாக்கி ,
இன்று நம் இளம்தலைமுறைக்கு தமிழ் எழுத்துக்கள் தடுமாறுகிறது.

இதை சொன்னால், அதெல்லாம் எனக்கு தமிழ் தெரியும் என்று சொல்லிவிட்டு கடக்கும் தமிழா ?! உனக்கு தெரிந்தால் போதுமா உன் பிள்ளைக்கு தெரியுதா ?!

தமிழ் எழுத்துக்கள் அன்னியமாய்ப்போய் , ஆங்கிலத்தில் தமிழை எழுதும் அவல நிலைக்கு எல்லாம் போனால்….

எழுத்தக்களற்ற, பேச்சு வடிவம் மட்டும் கொண்ட “நரிக்குறவர் பாஷை” போல மாறிடாதா , நம் தமிழ் !

இதற்குதானே ஆசைப்பட்டான் அந்த ஈவேரா எனும் ஈனக்கிழவன்!

எழுத்துகளற்ற மொழியை செம்மொழி என சொல்லுமோ இவ்வுலகம் ?!

எண்ணிப்பார்க்க வேண்டாமா , உலகிற்கு சொல்லிக்கொடுத்த தமிழ் சமூகம் ?!

தேசிய கல்விக் கொள்கை மூலமே கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது நம் தமிழ். திணிப்பென்ற ஒன்று இருக்குங்கால், இங்கு திணிக்கப்பட்டிருப்பது அன்னைத் தமிழே !

ஆம் !

ஒரு மொழியாகக்கூடப் படிக்கத் தேவையில்லை என்ற நிலை மாற்றி ,
‘ பயிற்று மொழி’ யே தமிழ் என பறை சாற்றுகிறது இந்தக் கொள்கை.

அரசியல் அற்பங்கள் தாண்டி சற்று அறிவுக்கு வேலை கொடுப்போம் !

அன்னைத் தமிழ் வாழ கிடைத்திருக்கும் இந்நல்வாய்ப்பை ஏற்போம் !

‘தமிழ்த் துரோகி’யாம் திராவிடத்தை தடமின்றி பொசுக்க பாரதி கண்ட அக்கனிக் குஞ்சுகளாய் உருவெடுப்போம் !

வாருங்கள் தமிழர்களே !

~ அ. அஸ்வத்தாமன், பாஜக


NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version