Home உள்ளூர் செய்திகள் சுதந்திரப் போராட்டத்தில் கருவூரின் பங்கு மகத்தானது..!

சுதந்திரப் போராட்டத்தில் கருவூரின் பங்கு மகத்தானது..!

கருவூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சியுடன் பரிசுகள் வழங்கல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கரூர் வெண்ணமலை சேரன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் 73 -ஆவது சுதந்திர தின விழா தாளாளர் K.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் பழனியப்பன் அனைவரையும் வரவேற்க ஆலோசகர் செல்வதுரை வாழ்த்துரை ஆற்றினார்.

இதை தொடர்ந்து., கருவூர் திருக்குறள் பேரவையின் செயலரும், தமிழ்ச் செம்மல் விருது பெற்ற மேலை பழநியப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியையும் தொடக்கி வைத்ததோடு, சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், விருதுகளை வழங்கினார்.

பின்னர் சிறப்புரை ஆற்றினார். அவர் தன் உரையில்… அடிமை இந்தியாவில் சுதந்திர போராட்டம் ஏன் ஏற்பட்டது என்றால் நமது நாட்டில் நமக்கு பேச்சுரிமை எழுத்துரிமை தவறுகளை தட்டிக் கேட்கும் உரிமை மறுக்கப்பட்டது.

எடுத்ததற்கு எல்லாம் அடக்குமுறையும் சிறைத் தண்டனையும், நாடு கடத்தலும் நடைபெற்றது. இதை எதிர்த்து தேசப்பிதா காந்தி நேரு, பாரதி, குமரன், காமராஜ், தில்லயாடி வள்ளியம்மை ஜான்சிராணி, தீரன் சின்னமலை, வ.உ.சி போன்ற பலரால் சத்யாகிரக வழியிலும் சுபாஸ் சந்திரபோஸ் போன்றவர்களால் தீவீரவாத வழியிலும்!

பல ஆண்டுகள் சிறையில் வாழ்ந்து உயிர் துறந்து பெற்றது தான் இந்த சுதந்திரம்.

கருவூர் மாவட்டத்தில் நைனா சாகிப் அவர் மனைவி, பவித்திரம் காளிமுத்து, வெங்கிடாசலம், தேவசகாயம் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானவர்கள் வெள்ளையனே வெளியேறு! போராட்டத்திலும், வேலாயுதம்பாளையம் ஆயுத ரயில் கவிழ்ப்பிலும் பங்கேற்று அரியலூர் _ குளித்தலை _ முசிறி – சேலம் சிறைகளில் பல மாதம் அடைக்கப்பட்டு போராடி உள்ளார்கள்

இந்திய சுதந்திரத்தில் தமிழகத்தின் பங்கும் தமிழகத்தில் கருவூர் மாவட்டத்தின் பங்கும் குறிப்பாக மைசூர் அரண்மனை கிஸ்தி வசூல் பைகளை பறித்து ஆனைமலைக்கும் சென்னிமலைக்கும் இடையே தீரன் சின்னமலை இது எங்கள் இந்திய மக்களுக்கு உரிமையான தொகை என கர்ஜித்து பறித்து மூன்று போர்களில் வெள்ளையர்களை தோற்கடித்தவன்..

தீரன் சின்னமலை போன்றவர்களின் பங்கும் மகத்தானது! என்று பேசினார்.

நாடு செழிக்க நல்ல மழை பொழிய, சுற்றுச்சூழல் மேம்பட ஒவ்வொரு மாணவ மாணவியும் இன்றைய நாளில் உங்கள் வீட்டில், தெருவில் ஒரு மரக்கன்றை நட்டு பராமரியுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை வசந்தி நன்றி கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version