செய்திச் சுருக்கம்: மதிய நேரச் செய்திகள்

செய்திச் சுருக்கம்:

♈???????????? ஹெல்மெட் போடலையா ரூபாய் 100 கொடுங்கள் விட்டுடுவாங்க ..இராயபுரம் போக்குவரத்து காவல்துறை north chennai
♈????????????வேலூர் மாவட்டம் அரக்கோணம்

மணல் லாரியில் சிக்கி 2 பேர் பலி

பனப்பாக்கத்தில் மணல் லாரி, இருசக்கர வாகனத்தில் மோதியதில் லாரி  டயரில்
சிக்கி காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த ஒரு ஆண், ஒரு  பெண்
பலி. நெமிலி போலீசார் விசாரணை

♈????????????இன்று புதுக்கோட்டை திருகோகர்ணத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளியில் இயற்க்கைஉணவுத் திருவிழா டைபெற்றது 300க்கு மேற் பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்பனர்

♈????????????முத்துநகரில் உணவுத் திருவிழா!

தூத்துக்குடியில் இன்றும் நாளையும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெறுகிறது.
முத்துநகர் கடற்கரையில் 2 நாட்களிலும் மாலை 5 முதல் 9 மணி வரை இத்திருவிழா நடைபெறும்.
தமிழகத்தின் பல்வேறு உணவு வகைகள் இத்திருவிழாவில் இடம்பெற உள்ளன!

♈????????????திண்டுக்கல் சாலை ரோட்டில் உள்ள SBI Mai N Branch ல் பணம் போடும் எந்திரம் பழுது பொதுமக்கள் அவதி கண்டுகொள்லாமல் தூங்கும் நிர்வாகம்

♈????????????காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகராட்சியில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்இரா.கஜலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

♈????????????ஹஜ் யாத்திரை தொடக்கம்: 1.36 லட்சம் இந்தியர்கள் பங்கேற்பு!

சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்களின் புனித நகரம் மெக்கா.
இங்கு இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை இன்று தொடங்கியது.
இதையொட்டி சவுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து 1.36 லட்சம் பேர் ஹஜ் யாத்திரையில் பங்கேற்கின்றனர்!

♈????????????திருச்சி:ஸ்ரீரங்கம்:
கர்நாடக அரசு காவேரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பதை கண்டித்தும்,காவேரி பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும்,தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணியினர் உய்யகொண்டான் வாய்க்காலில் பந்தல் போட்டு குடியோறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்

♈????????????*கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம்–திருவள்ளுவர் சிலை இடையே ரூ.15 கோடி செலவில் 95 மீட்டர் நீளத்துக்கு புதிய நடைபாலம் அமைக்கப்படுகிறது.*

♈????????????அறந்தாங்கியில் அரசு மருத்துவமனை முன்பு நேற்று தெரித்தின கோட்டை பகுதியில் தனியார் ஆம்புலன்ஸ் மோதி சாலை விபத்தில் இறந்து போன ேசக் அபத்துல்லா மற்றும் அவரது மனைவி அபிகாவின் உறவினர்கள் மருத்துவமனை அலட்சியத்தாலும் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

♈????????????
vishwarubam9962023699
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு ரூ. 2 கோடி பரிசு: தமிழக அரசு – ரியோ 2016 பாராலிம்பிக்கில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரருக்கு பரிசு அறிவித்த முதல்வருக்கு நன்றி என மாற்றுத்திறனாளி வீரர்கள் சங்கத் தலைவர் ரஞ்சித் பேட்டியளித்துள்ளார். மேலும் மாரியப்பனின் தாயாரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்

1] தமிழகத்தில் மீதம் உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு, வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

2] மனிதர்கள் போலவே நடனமாடும் நாய் : கலக்கல் வீடீயோ -பொதுவாக சிலருக்கு நடனம் ஆடும் திறைமை இருக்கும். ஆனால், ஒரு நாய் மனிதரை போலவே நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் உள்ள நாய், தன்னுடன் நாடும், தன்னுடைய பயிற்சியாளரை பார்த்து அவர் எப்படி ஆடுகிறாரோ அப்படியே அதுவும் ஆடுகிறது.

3] சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த அப்பல்லோ மருத்துவர் கைது -குஜராத், காந்திநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவரை அங்குள்ள மருத்துவர் ரமேஷ் பலாத்காரம் செய்துள்ளார்.

4] பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் 1.89 மீ. உயரத்தை தாண்டி மாரியப்பன் வென்ற தக்கப் பதக்கமே ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கம். இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.தங்கம் வென்ற மாரியப்பனுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிசு அறிவித்துள்ளது. தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல வெண்கல பதக்கம் வென்ற பஞ்சாப் வீரர் வருண் சிங்கிற்கும் ரூ.30 லட்சம் பரிசு அறிவித்துள்ளது விளையாட்டுத்துறை அமைச்சகம்

5] தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்சி
நம்பர் நடிகையின் காதலர் இயக்கும் படத்தில் பிரகாச நாயகன் நடிக்கிறார். இந்த செய்திக்குப் பின்னாலுள்ள திரைமறை விஷயங்களைத்தான் கோடம்பாக்கத்தில் கூடிக் கூடி பேசுகிறார்கள். ரௌடி படத்தின் மூலம் நம்பர் நடிகையின் காதலரான சிவனுக்கு நல்ல பிரேக் கிடைத்தது. அவர் இயக்குகிறார் என்றால் நடிக்க பலரும் தயார். ஆனால், காதலரின் விருப்பம் தலயை இயக்குவது. காதலரின் விருப்பத்தை நிறைவேற்ற தலயிடம் தூது அனுப்பியிருக்கிறார் நம்பர் நடிகை. ஆனால், எதிர்தரப்பில் நோ ரெஸ்பான்ஸ் .கடைசியில் நடிகையே தலயை சந்தித்து, தனது காதலருக்கு படம் நடித்துத் தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற விஷயங்களில் வளைவே இல்லாத நேர்கோடாக இருக்கும் தல, அது சாத்தியமில்லை என்று காரண காரியங்களுடன் கூறியிருக்கிறார். ஏமாற்றமடைந்த நடிகை அடுத்து, பிரகாச நடிகரிடம் வந்துள்ளார்
பிரகாச நடிகர், கௌதம இயக்குனரின் படத்திலிருந்து விலகிய போது, இயக்குனரை வாலன்ட்ரியாக அழைத்து வாய்ப்பு கொடுத்தவர் தல. இப்போது தல ஒரு இயக்குனருக்கு வாய்ப்பு மறுத்துள்ளார். விடுவாரா பிரகாச நடிகர்? உடனே ஓகே சொன்னதோடு, லயன் முடிந்ததும் சிவன் படம்தான் என்று நடிகையிடம் உறுதியளித்திருக்கிறார். இந்த ஈகோ காரணமாக பாதிக்கப்பட்டிருப்பவர், சாதிய கொம்பு சீவும் படங்களை எடுத்து வரும் இயக்குனர். அவர்தான் பிரகாச நடிகரை அடுத்து இயக்குவதாக இருந்தது. நடிகை இடையில் புகுந்ததால் அவரது படம் தள்ளிப் போயிருக்கிறது

இந்த கதை இப்படியென்றால், இரண்டு முகம் கொண்டவரின் கதை வேறு மாதிரி. அவர் நடித்த ஓரெழுத்துப் படம், பிரமாண்ட இயக்குனர் காரணமாக தறி கெட்டு ஓடியது. அதனை நடிகரின் வெற்றி என்று சொல்ல முடியாது. அடுத்து அவசர கோலத்தில் பத்து எண்றதுக்குள்ள ஒரு படத்தில் நடித்தார். படம் பப்படம். அதிகம் எதிர்பார்த்த இரண்டு முகத்துக்கும் சரியான முகவுரை எழுதவில்லை பத்திரிகைகள். நடிகர் நல்லா நடிச்சிருக்கார் என்று சர்ட்டிபிகெட் தருகிறவர்களும் படத்தின் இரண்டாம் பகுதி குறித்து எதிர்மறையாகவே எழுதியுள்ளனர்.இனி எந்த மாதிரி படத்தில் நடித்தால் எடுபடும் என்ற தீராத குழப்பத்துக்கு நடிகர் ஆளாகியிருக்கிறார். நடிக்கத் தெரிந்தவர்களின் நிலையே இப்படியென்றால்… கஷ்டம்தான் சினிமாவில் நீடிப்பது

6] சிரஞ்சீவியின் 150 -வது படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார், கேதரின் தெரேசா

7] பழச்சாறில் மயக்க மருந்து: சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் -பெங்களூரில் பிறந்த நாள் விழா ஒன்றுக்கு சென்ற சிறுமிக்கு பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார்.

8] 104 ரூபாயும், ஒரு மது பாட்டிலும் கொடுத்துவிட்டு எனது மகளை பலாத்காரம் செய்துகொள்: கொடூர தாய்! -ரஷ்யாவின், கபரோவ்ஸ் பகுதியில் ஒரு தாய் 104 ரூபய்க்கும், ஒரு மது பாட்டிலுக்கும் தனது 10 வயது மகளை ஒரு பலாத்காரனுக்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு கட்டிடத்தில் 10 வயது சிறுமி ஒருவர் காலில் அடிபட்டு அழுது கொண்டிருப்பதை அவ்வழியே வந்த ஒருவர் பார்த்து காவல்துறைக்கும், அவசர சிகிச்சைக்கும் தகவல் அளித்தார். சிறுமிக்கு சிகிச்சை அளித்து சோதனை செய்ததில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.பின்னர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், தன்னை தனது தாயே ஒரு நபரிடம் பலாத்காரம் செய்ய விற்றதாகவும், அந்த நபர் ஏற்கனவே ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தவர் எனவும் கூறினார்.

9] ரூ.1,34,000 கோடி முதலீட்டில் ரிலையன்ஸ் ‘ஜியோ’ உருவாக்கத்தின் பிண்ணனி என்ன??? -ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 1 ரூபாய் கடன் கூட இல்லாமல் சுமார் 2,000 கோடி ரூபாய் நிதி இருப்புடன் சிறப்பான நிலையில் இருந்தது. இதனாலேயே இந்திய வர்த்தகச் சந்தையில் இந்நிறுவனத்திற்குத் தனி மதிப்பு இருந்து வருகிறது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பிளாஸ்டிக், பாலிமர் உற்பத்தியை முக்கிய வர்த்தகமாகக் கொண்டு இயங்கி வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெலிகாம் துறையில் 1,34,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஜியோ நிறுவனத்தை உருவாக்கியது. 2,000 கோடி ரூபாய் நிதி இருப்பில் செழிப்பான நிலையில் இருந்தது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். 6 வருடங்களுக்கு முன்பு இன்போடெல் பிராட்பேண்ட் நிறுவனத்தில் 95 சதவீத முதலீட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்கத் துவங்கியது. இதன் பின்னர் டெலிகாம் பிரிவிலும் தொடர்ந்து அதிகளவிலான முதலீட்டைச் செய்யத் துவங்கியது. கடந்த 7 வருட வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்தகளின் பங்குகள் இந்திய சந்தையில் ஒரு தேக்க நிலையை அடைந்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் தான் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரீடைல் வர்த்தகத்தில் தனது கால்தடத்தைப் பதித்தது.
ரிடைல் வர்த்தகத்தில் போதுமான வர்த்தகத்தையும் லாபத்தையும் பெற முயற்சி செய்து வரும் சூழ்நிலையில், ரிஸ்க் என்றாலும் பாதாளத்தில் வழும் அளவிற்கு ரிஸ்க் இல்லை என்ற எண்ணத்தில் டெலிகாம் துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இறங்கியுள்ளது.
ஒரு நிறுவனம் தனது வர்த்தகப் பிரிவுகளை அதிகளவில் பிரிந்து வெற்றி பெறும்போது நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்கள், பங்குதாரர்களின் முதலீட்டின் மதிப்பும் மிகப்பெரிய அளவில் உயரும் என்பது ரிலையன்ஸ் போட்டுள்ள கணக்கு.

10] ராஜஸ்தான் மாநிலத்தில் ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் பிறந்து நான்கு மாதமே ஆன பெண் குழந்தை ஒன்றை அதன் தாய் கழுத்தை நெரித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது -கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி ஜெய்பூரில் 4 மாத பெண் குழந்தையின் உடல் ஒரு வீட்டில் உள்ள பெட்டியில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.தடயவியல் பரிசோதனையின் மூலம் குழந்தையின் ரத்தம் அதன் தாயின் கை நகங்களில் உறைந்திருந்ததை கண்டுபிடித்தனர்

11] நடிகையை திருமணம் செய்யப்போகிறார் யுவராஜ் சிங்! -இவர் பாலிவுட் நடிகையான ஹேசல் கீச்சை வருகிற டிசம்பர் மாதம் திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார். இந்த தகவலை யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங் உறுதி செய்துள்ளார். இது ஒரு காதல் திருமணம்.மேலும், யுவராஜின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதிக்கு முன்னதாகவே திருமணம் நடைபெறும் என்று ஷப்னம் சிங் கூறியுள்ளார். பில்லா, பாடிகார்ட் போன்ற படங்களில் நடித்தவர் ஹேசல் கீச் என்பது குறிப்பிடத்தக்கது.

12] காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு

13] இனி பத்ம விருதுகளுக்கு உரியவர்களை மக்களே தேர்ந்து எடுக்கலாம்

14] சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக், கடந்த 2011 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் வழங்கியுள்ளதாக புதிய குற்றச்சாட்டை கிளப்பி சுப்ரமணியன் சுவாமி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்

15] பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

16] புனித ஹஜ் பயணம் பலத்த பாதுகாப்பு ஈரான் புறக்கணிப்பு

17] * போதை அதிகமானதால் கார் ஓட்டும்போது சுயநினைவு இழந்த பெற்றோர் 4 வயது மகன் தவிப்பு* அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில்

18] கர்நாடகத்தின் வலையில் தமிழக, மத்திய அரசுகள் சிக்க கூடாது -டாக்டர் ராமதாஸ் அறிக்கை

19] திருமூர்த்தி அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு ஜெயலலிதா உத்தரவு

20] ராஜஸ்தான் மாநிலம் பார்மர் என்ற இடத்தில் எம்.ஐ.ஜி.ரக போர் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானிகள் இருவரும் பத்திரமாக தப்பித்ததாக தகவல் தெரிவிக்கப்படுகின்றன

21] பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

22] ஜம்மு-காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் இரு பிரிவினர் இடையே நடந்த மோதலில் இளைஞர் ஒருவர் மரணமடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

23] தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் திருப்பூர் மணி சென்னையில் காலமானார். ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் திருப்பூர் மணி ஆகும்

24] பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பனுக்கு ரூ.50000 பரிசு வழங்கப்படும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

25] பதக்கம் வென்ற மாரியப்பன், வருண்சினங் பட்டிற்கும் பிரணாப் முகர்ஜி வாழ்த்து

26] சிங்கப்பூரில் இருந்து திருச்சி வரும் பயணிகளுக்கு ஜிகா வைரஸ் தொற்று உள்ளதா என திருச்சி விமான நிலையத்தில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்

27] மும்பை: மும்பையில் ராஜ் தாக்கரேவிடம் மன்னிப்பு கேட்கக் கோரி, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் கபில் சர்மா இல்லத்தின் முன்பு நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தன்னிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் கபில் சர்மா டிவிட்டர் மூலமாக பிரதமர் நரேந்திர மோடியிடம் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள், கபில் சர்மா இல்லத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

28] காவிரி பிரச்சனை தொடர்பாக மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினால் மட்டுமே போதாது : திருமாவளவன்

29] மேற்கு வங்கத்தில் இரண்டு யானைகள் உயிரிழப்பு