
திருமணமாகி ஒரு சில நாட்களிலே காதல் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திரிசூலத்தை சேர்ந்தவர் அபின்ஷாவும் மனீஷாவும். இவர்கள் 5 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தனர். ஆனால் வெகுநாட்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாலமலேயே வாழ்ந்து வந்து நிலையில் மனீஷா கர்ப்பமாகியுள்ளார்.
இதையறிந்த உறவினர்கள் ஜோடியை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன் மனிஷாவின் வற்புறுத்தலின் பேரில் இருவருக்கும் இடையே திருமணம் நடந்தள்ளது.
கல்யாணம் ஆகி ஒரு சில நாட்களே ஆன நிலையில் மனீஷா தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக மனிஷாவின் தந்தைக்கு அபின்ஷா தகவல் அளித்துள்ளார். இறுதிச்சடங்குக்கு வந்த உறவினர்கள் அபின்ஷா மேல் சந்தேகமடைந்து அவரது மொபைல் போனை சோதனை போட்டதில் அவருக்கு அனிதா என்ற வேறு பெண்ணோடு தொடர்பு இருந்ததைக் கண்டுபிடித்தார்கள்.
இதனை மனீஷா கண்டுபிடித்ததால் தான் அவரைக் கொன்று தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டுள்ளார் அபின்ஷா.