
சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலை மாட்டாங்குப்பம் கெனால் தெருவை சேர்ந்தவர் சரவணன். மகன் அறிவழகன் (24). பிரபலமான ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவழகனுக்கும் அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி என்ற பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அறிவழகன், தேன்மொழியின் ஜாக்கெட்டை கிழித்து மானபங்கப்படுத்தியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தேன்மொழியின் மகன்களான வினோத், பாலாஜி ஆகியோர் அறிவழகனை கொலை செய்ய முடிவுசெய்தனர். நேற்று முன்தினம் இரவு அறிவழகன் மாட்டாங்குப்பத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் வினோத், பாலாஜி ஆகிய 2 பேரும் நுழைந்து, இருவரும் சேர்ந்து அரிவாள், கத்தியால் அறிவழகனின் தலையில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றனர்
இதில் பலத்த காயமடைந்த அறிவழகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த்தார். உடனே இருவரும் தப்பி ஓடி விட்டனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அறிவழகனின் பெற்றோர் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அறிவழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்த வினோத், பாலாஜி ஆகிய 2 பேரையும் பிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்