
விக்கிரவாண்டி தொகுதியில் பணம் விளையாடி வருவதாக கூறப்படுகிறது
டோக்கன் என்றாலே ஆர்கே நகர் இடைத்தேர்தல் தான் நினைவுக்கு வரும் டோக்கன் என்றாலே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் டிடிவி தினகரன் தான் நினைவுக்கு வருவார் 20 ரூபாய் டோக்கன் இன் எழுதிக் கொடுத்து வாக்குறுதி அளித்து ஓட்டு பெற்று எம்எல்ஏ ஆனவர் தினகரன் என்பது ஊரறிந்த பரமரகசியம்
இப்போது வாக்காளர்களுக்கு பணம் நேரடியாக வினியோகிக்க படுவதற்கு பதில் டோக்கன் கொடுப்பது நவீன உத்தி ஆகிவிட்டது
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட மாம்பழப்பட்டு கிராமத்தில் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிக்க வந்திருந்தார்.
அப்போது வரவேற்பளித்த மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விக்கிரவாண்டி தொகுதியில் டோக்கன் விளையாடி வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது