
இன்று 15 மாவட்டங்களில் கனமழை என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நேற்று முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகின்றது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையால் அண்ணா சாலை உள்பட முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் இன்றும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் இந்தப் பட்டியலில் உள்ளது.
இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் குறித்த விவரம்:
1 – சிவகங்கை
2 – புதுக்கோட்டை
3 – நாகை
4 – திருவாரூர்
5 – தஞ்சாவூர்
6 – திருவண்ணாமலை
7 – கோவை
8 – நீலகிரி
9 – திருநெல்வேலி
10 – தூத்துக்குடி
11 – கடலூர்
12 – விழுப்புரம்
13 – சென்னை
14 – காஞ்சிபுரம்
15 – திருவள்ளூர்
மேற்கண்ட 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் 15 மாவட்டங்களில் சில இடங்களில் மிக கன மழை பெய்யும் என்றும் இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், சென்னையில் அனைத்து பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார். சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. மழை காரணமாக சாலைகளில் இன்னமும் நீர் தேங்கியுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (18-10-2019)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 109.65 அடி
நீர் வரத்து : 829.05 கன அடி
வெளியேற்றம் : 154.75 கன அடி
சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 120.67அடி
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil
மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 46.15அடி
நீர் வரத்து : 607 கனஅடி
வெளியேற்றம் : NIL
நெல்லை மாவட்ட மழை அளவு (18-10-19)
பாபநாசம்: 15 மி.மீ
சேர்வலாறு: 68 மி.மீ
மணிமுத்தாறு: 3.2மி.மீ
கடனா: 5 மி.மீ
ராமா நதி: 5 மி.மீ
கருப்பா நதி: 10.5 மி.மீ
குண்டாறு: 19 மி.மீ
அடவிநயினார்: 12 மி.மீ
அம்பாசமுத்திரம்: 14.60 மி.மீ
ஆய்குடி: 12.20 மி.மீ
ராதாபுரம்: 19 மி.மீ
சங்கரன்கோவிலில்: 1 மி.மீ
செங்கோட்டை: 13 மி.மீ
சிவகிரி: 3 மி.மீ
தென்காசி: 35 மி.மீ