
திருச்சி அருகே மணப்பாறையில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் 30 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுர்ஜித் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் உதவியுடன் குழந்தையை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. குழந்தை வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்த போது 30 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துள்ளான்.
மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த பிரிட்டோவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கொத்தனாரான அவரது இரண்டாவது மகன் சுஜித் வில்சன் வீட்டிற்கு அருகே உள்ள சோளக்காட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.
சோளப்பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில், அங்கு 25 அடி ஆழத்திற்கு தோண்டி, பயன்படுத்தபடாமல் உள்ள ஆழ்குழாய் கிணறு ஒன்று திறந்த நிலையில் உள்ளது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த சுஜித் வில்சன், எதிர்பாரதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதை கண்டு பதறிப்போன அவனது பெற்றோர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து குழந்தையை மீட்க முயன்றனர்.
மணப்பாறையிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப் பட்டுள்ளன. வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் வந்தனர்.

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது! குழந்தையை மீட்பதற்கு தேவையான சிறப்புக் கருவிகள் கொண்டுவரப்படுகிறது!
குழந்தையை உயிருடன் மீட்கும்வரை தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும்! மருத்துவக் குழு சம்பவ இடத்தில் இருக்கவும், மருந்து, உபகரணங்களை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு இடப்பட்டிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை சுவாசிக்க போதுமான ஆக்ஸிஜன் இருப்பதால் குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்தனர். இரண்டு வயது குழந்தையான சுஜித் வில்சன், கிணற்றுக்குள் அமர்ந்த நிலையில், தலைக்கு மேல் கைகளை வைத்த நிலையில் உள்ளான்.
குழந்தையை மீட்கும் பணி நடைபெறும் இடத்திற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விரைந்தார்.