
தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மூன்று நாளில் ஆறரை இலட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் மட்டும் பயணித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நகரங்களில் வசிப்பவர்கள் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக தங்கள் ஊர்களுக்கு சென்றனர் கடந்த வெள்ளி இரவு முதல் அரசு பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்தது
கடந்த 3 நாட்களாக சென்னையில் இருந்து 10 ஆயிரத்து 669 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம், பூவிருந்தவல்லி மற்றும் கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்ட இந்த பேருந்துகளில் ஆயிரக்கணக்கானோர் பயணித்தனர்.
தென்மாவட்டங்களுக்கு சென்ற பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால் 600க்கும் மேற்பட்ட போலீசார் நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
பண்டிகையை கொண்டாட 3 நாட்களில் அரசுப் பேருந்துகள் மூலம் 6 லட்சத்து 40 ஆயிரத்து 140 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக போக்குவரத்துத் துறையினர் தெரிவித்துள்ளனர்