Home உள்ளூர் செய்திகள் வேறோர் பெண்ணை மணக்கும் ஆசை! திருமணமான 3 ஆம் நாளே முத்தலாக் கூறிய கணவன்!

வேறோர் பெண்ணை மணக்கும் ஆசை! திருமணமான 3 ஆம் நாளே முத்தலாக் கூறிய கணவன்!

thalak

வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாக 24 வயது பெண் அளித்த புகாரில் 26 வயது இஸ்லாமியர் மற்றும் உறவினர்கள் 6 பேர் மீது இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கோவை காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி முகமது அலி என்பவருக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் ஆன நாள் முதலே பெண்ணிடம் வரதட்சனை கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

முகமது அலியின் குடும்பம் 80 சவரன் நகையை கேட்டதாகவும், ஆனால் 40 சவரன் நகை மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் இதனால் மீதி நகைகளை கேட்டு அடிக்கடி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் நகைகள் கொடுக்க பெற்றோரால் இயலவில்லை என கூறி அந்த பெண்ணை அவதூறாக பேசியதாகவும், கணவனுடன் குடும்பம் நடத்த அனுமதிக்கவில்லை எனவும் விசாரணையில் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமணம் ஆன 3வது நாள் கேரளாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் வேறு ஒரு பெண்ணின் படத்தை காண்பித்த முகமது அலி, இவளைத்தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இதை மனைவி மறுக்கவே ​​அவரை பார்த்து ‘தலாக்’ என்று மூன்று முறை சொல்லியதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரில் கணவர் முகமது அலி, அவரது 2 சகோதரிகள், சகோதரர், மைத்துனர், தந்தை, தாய் ஆகியோருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் . முத்தலாக் தடை சட்டம் குறித்து இஸ்லாமிய இளைஞர்களிடைய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து விடுவதாக சிலர் தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version