
திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிபப்பாளர்களுக்கு பட்டா செய்து கொடுக்கும் தமிழக அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி இந்துமுன்னணி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் இந்துமுன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் குற்றாலநாதன் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.
இந்துமுன்னணி மேற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி, மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம், கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் துர்க்கைமுத்து, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சாக்ரடீஸ், மாநகர் மாவட்ட துணைத்தலைவர் சங்கர், மாநகர் மாவட்ட செயலாளர்கள் சிவா, சுடலை செல்வராஜ், மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இசக்கிமுத்து, நமசிவாயம், ராஜசெல்வம், உழவாரப்பணிக்குழு பொறுப்பாளர்கள் சுப்பிரமணியன், ராஜா, ஆணையப்பன்
நெல்லை மேற்கு மாவட்ட துணைத்தலைவர் திருமலை, செயலாளர் ஈஸ்வரன், நெல்லை கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் வைத்தியநாதன், நெல்லை கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்வகுமார், நாகராஜன், ரமேஷ், தச்சை சிவா, நெல்லை அம்பலவாணன், நெல்லை ஆறுமுகக்கனி, செங்கோட்டை முருகன் தென்காசி இசச்கிமுத்து, சங்கை ஆறுமுகம், செங்கோட்டை மூர்த்தி, ஆலங்குளம் முத்துபாண்டி, கடையநல்லூர் தமிழரசன், குருவிகுளம் பொன்ராஜ், வி.கே.புதூர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லையப்பர் திருக்கோவில், சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், காசிவிஸ்நாதர் திருக்கோவில், ராஜகோபாலசுவாமி திருக்கோவில், திரிபுராந்தீஸ்வரர் திருக்கோவில், குற்றாலநாதசுவாமி திருக்கோவில், ஆயிரத்தம்மன் திருக்கோவில், பாநாசநாத சுவாமி திருக்கோவில் உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள 75 திருக்கோவில் பக்தர்கள் தனித்தனியாக மனு அளித்தனர்.