
திருமணம் நடைபெற 2 நாளே உள்ளே நிலையில் தனக்கு சொந்தமான சொத்தை சகோதரன் தரவில்லை எனக்கூறி புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் சம்பவத்தால் பரபரப்பு..!
கோவை மாவட்டம் வாழைத்தோட்டத்தை சேர்ந்த எல்சியா என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு நவம்பர் 1ம் தேதி திருமணம் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
எல்சியாவுக்கு திருமணம் நடைபெற 2 நாளே உள்ள நிலையில் அக்டோபர் 30ம் தேதி தனது சகோதரனிடம் செட்டிப்பாளையத்தில் தந்தை பெயரில் உள்ள நில பட்டாவை தருமாறு கூறி உள்ளார்.

அதற்கு பின்னர் தருவதாக அவரது சகோதரர் யோகேஷ் கூறியதாக தெரிகிறது.
இதனால் சொத்தை உடனடியாக தருமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் எல்சியா.
மீண்டும் மீண்டும் சகோதரர் மறுக்க ஆத்திரம் அடைந்த எல்சியா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சகோதரர் யோகேஷ் அவரை காப்பாற்ற முயன்றார்.
இதனால் அவரது உடலில் தீ பரவியது.
உடலில் தீ பற்றிக் கொண்டதால் நெருப்பின் தாக்கத்தால் துடிதுடித்தார் எல்சியா. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 2 பேரையும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் எல்சியா பரிதாபமாக உயிர் இழந்தார்.
யோகேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சொத்து தகராறில் தீக்குளித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.