திருச்சி டிசி மயில்வாகனனை அழைத்துப் பாராட்டிய முதல்வர்

அவருடன் நின்றுகொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், இதே போன்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையைச் செவ்வனே செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

சென்னை:
ஜல்லிக்கட்டு தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களின் போது, பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்காமல் பாதுகாப்பாகவும் அதே நேரம் திறமையாகவும் கையாண்டு அமைதியை ஏற்படுத்தியதற்காக, திருச்சி காவல் துறை துணை ஆணையர் மயில்வாகனனை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், அவருடன் நின்றுகொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், இதே போன்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையைச் செவ்வனே செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.