Home உள்ளூர் செய்திகள் கேரள கழிவுகள் மாவட்டத்துக்குள் வருவது தடுத்து நிறுத்தப் படும்!

கேரள கழிவுகள் மாவட்டத்துக்குள் வருவது தடுத்து நிறுத்தப் படும்!

tenkasi collector arun sundar dayalan

தென்காசி மாவட்டத்தில் கல்வி, பொது சுகாதாரம், ஊரக வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வரும் கழிவுகள் கொட்டப் படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்!

தென்காசி புதிய மாவட்டத்தின் முதல் ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்… அப்போது,

திங்கள்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். தற்காலிகமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க 5.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது

கல்வி,பொது சுகாதாரம், ஊரக வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 167 பணியிடங்கள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அண்டை மாநிலத்தில் இருந்து கேரள கழிவுகள் மாவட்ட எல்லையில் கொட்டப்பட்டு வருகின்றன என்று குருஞ் செய்திகள் வருவதால், அதனை கண்காணித்து தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது புதிதாக நியமிக்கப் பட்டுள்ள தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்!

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version