
செங்கோட்டையில் உரிமைக்குரல் ஓட்டுநர்கள் தொழிற்சங்க கூட்டத்தில் டீசல் விலைஉயர்வு மற்றும் இன்சூரன்ஸ் உயர்வை கட்;டுப்படுத்த கோரி தீர்மானம் நிறைவேற்றம்
.
செங்கோட்டை முத்துசாமி பூங்காவிலுள்ள மனமகிழ் மன்றத்தில் வைத்து உரிமைக் குரல் ஓட்டுநர்கள் தொழிற்சங்க தென்மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு நெல்லை மாவட்ட செயலாளர் உதயசூரியன் தலைமைதாங்கினார். வீராணம்சிவா முன்னிலைவகித்தார். செங்கோட்டை கிளை நிர்வாகி வண்டிமுத்து அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலைய செயலாளர் காளிமுத்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் 1. சொந்த பயன்பாட்டிற்கென வாங்கி வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தடை செய்திட வேண்டும். 2. டீசல் விலைஉயர்வு, இன்சூரன்ஸ் உயர்வை கட்டுப்படுத்தவும், 3. புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்ப பெற்றிடவும், 4. ஓட்டுநர்களுக்கு நலவாரிய திட்டத்தில் சலுகைகளை அதிகப்படுத்தி ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை பேணி பாதுகாத்திடவும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றபட்டது. கூட்டத்திற்கு தென் மாவட்ட கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நெல்லை கிளை நிர்வாகி ஆறுமுகம் நன்றி கூறினார்.