சென்னை:
மன உளைச்சல் காரணமாக கூவத்தூர் சொகுசு விடுதியில் சிறைவைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ., சசிகலாவுக்கு எதிராகப் பேசி முரண்டு பிடித்ததால், அவருக்கு அடி உதை விழுந்தது. இதனால் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க விரைந்தனர். இதைக் கண்ட அதிர்ச்சியில் உறைந்தனர் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்.
கூவத்தூரில் முதல் நாள் , 3.48 மணிக்கும், இரண்டாம் நாள் 5.00 மணிக்கும் 3ம் நாளான இன்று மாலை 5.45 மணிக்கும் சசிகலா வந்திருக்கிறார். இன்று இரவு எம்.எல்.ஏக்களோடு அங்கேயே தங்குவதற்கான முன்னேற்பாடுகளோடு தான் சசிகலா வந்திருக்கிறார்.
எம்.எல்.ஏக்கள் இங்கே கடந்த 6 நாட்களாக கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். எம்.எல்.ஏக்களுக்கு பல வகையான உணவுகளும், சிற்றுண்டிகளும் டான்ஸ் போதை என்று உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியிலே வைக்கப்பட்டிருந்தாலும், தகவல் தொடர்புகள் எல்லாம் துண்டிக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அங்கே பாதுகாப்புக்கு இருக்கும் செந்தில்பாலாஜி, ஓ.எஸ்.மணியன், ஜெயக்குமார் ஆகியோர் அவர்களிடம் சசிகலாவுக்கு ஆதரவு தரும்படி தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதால் சிலர் எரிச்சல் அடைந்தார்களாம்.
இதன் காரணமாகத்தான், செய்யாறு எம்.எல்.ஏ மோகன் சசிகலாவுக்கு எதிராகப் பேசியதாகவும், நான் எப்படியும் மாற்றித்தான் ஓட்டு போடுவேன் என்று முரண்டு பிடித்ததால். செம்மையாக அவரைக் கவனித்ததாகவும் கூறப்படுகிறது. இது மற்ற அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பிறகே முதல் உதவிக்கு ஆம்புலன்ஸ், டாக்டர்களை வரவழைத்தி ருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்துதான், சசிகலா இரவு கூவத்தூரில் தங்கும் ஏற்பாடுகளோடு வந்திருக்கிறாராம். மேலும், நாளை உச்ச நீதிமன்றத்தில் வரும் தீர்ப்பைப் பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வசதியாக அங்கே அவர் தங்குவதாகவும் கூறப்படுகிறது.