நெல்லையில் போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள் கைது

இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:
நெல்லை போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் செய்தியாளர் சந்திரன் தாக்கப்பட்டதை கண்டித்தும் , நெல்லை செய்தியாளர்கள் மதுரையில் தாக்கப்பட்டதை கண்டித்தும் ,, பறித்த காமிராவை திரும்ப கொடுக்க கோரியும் நெல்லை DIG அலுவலகம் முற்றுகை செய்யப்பட்டது. தமிழகத்தில் தொடர்ந்து செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப் படுவதில் காவல்துறையை கண்டித்து நெல்லை மாவட்ட பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் செய்தியாளர்கள் ஒன்றிணைந்து நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்தப் போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம் தொடரும் என பத்திரிகையாளர்கள் அறிவித்துள்ளனர்.